INDvsAFG.. உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. சாம்சனுக்கு முதல் வாய்ப்பு?.. 3 மாற்றங்களுக்கு இடம்

0
222
ICT

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் நாளை பெங்களூரில் சின்னசாமி மைதானத்தில் நடக்க இருக்கிறது.

நடந்து முடிந்திருக்கும் முதல் இரண்டு போட்டிகளில் தொடரை கைப்பற்றி விட்டது. எனவே நாளைய போட்டியில் இந்திய அணி சில புதிய முயற்சிகளை செய்யலாம். இதுவரையில் வாய்ப்பு தரப்படாத வீரர்களுக்கு வாய்ப்பு தரலாம்.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடந்த இரண்டு போட்டிகளிலும் இதுவரை ரன் கணக்கை துவங்கவில்லை. எனவே அவர் ஓய்வெடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பு தருவது கடினம்.

இதே போல் விராட் கோலி முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. எனவே அவரும் மூன்றாவது போட்டியில் ஓய்வெடுக்க விரும்ப மாட்டார்.

இந்திய அணியை பொருத்தவரையில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஸ் கான் இருவரையும் விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பும்.

- Advertisement -

இவர்கள் இருவரையும் விளையாட வைக்க, இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கும் சிவம் துபே மற்றும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

சிவம் துபேவுக்கு ஓய்வு கொடுத்தால், பேட்டிங் நீளத்திற்காக வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார். இல்லையென்றால் இவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சிவம் துபே விளையாடுவார். மேலும் ரவி பிஷ்னாய்க்கு ஓய்வு கொடுக்கப்பட்டு குல்தீப் யாதவ் விளையாடலாம்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான வலிமையான இந்திய உத்தேச பிளேயிங் லெவன் ;

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.