இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது மற்றும் தொடரில் கடத்திப் போட்டி இன்று கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது!
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி
யின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்ய ஆரம்பித்தது இந்திய அணியின் பேட்டிங் அதகளம்!
கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேற, கில் மற்றும் விராட் கோலி இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை வதைத்து விட்டார்கள் என்றே கூறலாம். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் அடித்தார்கள். கில்லுக்கு இது இரண்டாவது ஒருநாள் போட்டி சதம் ஆகும். விராட் கோலிக்கு இது 46வது ஒருநாள் போட்டி சமமாகும். கில் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் கிடைத்தது.
இதற்கடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியை மட்டுமே அளித்தார்கள். மிக அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் இலங்கை அணியின் முதல் வரிசை வீரர்களை உடனுக்குடன் வீழ்த்தி சரிவை ஆரம்பித்து வைத்தார். இதிலிருந்து மீளவே முடியாத இலங்கை அணி இறுதியில் 22 ஓவர்களில் 73 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் உலக சாதனை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் பத்து ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் செய்து 32 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சாமி மற்றும் குல்தீப் இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள். மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியது.
இதற்கடுத்து இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் உள்நாட்டில் நியூசிலாந்து அணி உடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது!