இந்திய டாப் ஆர்டர் எங்க பவுலர்கிட்ட தடுமாறுதா? – முகமது ரிஸ்வான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பான பேச்சு!

0
7566
Rizwan

கடந்த வாரம் போலவே மீண்டும் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பரபரப்பாக மாறி இருக்கிறார்கள். நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாளை இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன!

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் அந்த அணி மிகவும் செட்டில் ஆன அணியாக தெரிகிறது. அந்த அணியில் யார் விளையாடுவார்கள்? யாருக்கு என்ன ரோல்? என்பது குறித்து பெரிதான சந்தேகங்கள் ஏதும் இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் போட்டிக்கு முன்பாக பிளேயிங் லெவனை அறிவித்து அதிரடி காட்டி வருகிறது. இந்த வகையில் நாளை இந்தியாவுக்கு எதிராக விளையாடும் அணியையும் அறிவித்துவிட்டது.

இந்தப்புறம் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மூவரில் எந்த இருவர் இடம் பெறுவார்கள்? என்பது குழப்பமாக இருந்து வருகிறது. அதேபோல் பவுலிங் யூனிட்டில் சர்துல் தாக்கூர் தொடர்வாரா? சிராஜ் இல்லை சமி யார் விளையாடுவார்கள்? என்பது குறித்தும் தெரியவில்லை.

இந்த நிலையில் இன்று போட்டிக்கு முந்தைய நாளில் பத்திரிக்கையாளர்களை பாகிஸ்தான அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் எதிர்கொண்டார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் அதிரடியான பதில்களை அளித்தார். பாகிஸ்தான் ஃபாஸ்ட் பௌலிங் யூனிட்டுக்கு இந்திய டாப் ஆர்டர் தடுமாறுகிறதா? என்று கேள்வி முன் வைக்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு பதில் அளித்து பேசிய முகமது ரிஸ்வான் “எங்களது வேகப்பந்துவீச்சாளர்கள் எங்களை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் முதலிடத்திற்கு கொண்டு வந்ததில் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள். எங்களுடைய மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும், இந்தியாவின் டாப் ஆர்டருக்கு மட்டுமல்ல, உலகில் எல்லா அணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.

இவர்கள் மிகத் திறமையானவர்கள். அப்படியே எங்களுடைய பென்ச் வலிமையை எடுத்துக் கொண்டால், அதுவும் மிக நன்றாக இருக்கிறது. இப்படியான காரணங்களால்தான் நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறோம்.

இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் எங்கள் பந்துவீச்சாளர்களை அதிகம் எதிர்கொண்டு விளையாடியது கிடையாது. அவர்கள் எங்களிடம் ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தார்கள். ஆனால் அவர்கள் ஸ்கோர் போர்டில் 270 ரன்களை நெருங்கினார்கள். அவர்களது பந்துவீச்சாளர்கள் நிச்சயம் எங்களுக்கு எதிராக வருவார்கள்.

இந்தியாவிடம் சிறந்த பந்து வீச்சு தாக்குதல் உள்ளது. உலகின் மிகச்சிறந்த சிலர் நாளை நமக்கு சவால் விடுகிறார்கள். ஆனால் நாம் தொழில் முறை வீரர்கள் என்பதால் நிச்சயம் இந்த சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.

பாகிஸ்தானியர்கள் நாங்கள் வெல்ல வேண்டும் இந்தியா தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது இயற்கையானது. இது அந்தந்த நாடுகளின் மீதான அன்பு மட்டுமே. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறோம். அதற்கான பலன் இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது. நாளை எங்களால் முடிந்ததை நிச்சயம் வழங்குவோம்!” என்று கூறி இருக்கிறார்!