பாகிஸ்தானுடன் மோதும் இந்தியாவின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

0
4183

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் 12 சற்றில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இங்கு கணிக்கப்பட்டுள்ளது.

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் சூப்பர் 12 சுற்றை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

இப்போட்டியை காண்பதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மெல்பர்ன் மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி இரண்டு முறை தோல்வி, ஒரு முறை வெற்றியும் பெற்று இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவிற்கு நேர்ந்த தோல்விக்கு பழி தீர்ப்பதற்கு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

வானிலை பொறுத்த வரை மேகமூட்டங்கள் சற்று குறைவாக காணப்படுகிறது. மழைப்பொழிவிற்கான வாய்ப்பு குறைந்துள்ளது என வானிலை நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் போட்டியின் இரண்டாம் பாகத்தில் மழைப்பொழிவு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஏனெனில் முன்னணி பந்துவீச்சாளர் பும்ரா அணியில்இல்லை. அவருக்கு பதிலாக வந்திருக்கும் முகமது சமி நன்றாக செயல்பட்டு வருகிறார்.

சமி பிளேயிங் லெவனில் இருப்பாரா? ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் யார் பிளேயிங் லெவனில் வைக்கப்படுவார்? என்கிற பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இதை தீர்க்கும் விதமாக இந்தியாவின் பிளேயிங் லெவன் இங்கே கணிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், சகல், புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், முகமது சமி.

- Advertisement -