இந்திய கிரிக்கெட்

எங்க பேட்ஸ்மேன்ஸ் பாகிஸ்தான்ல ஆட விரும்புவாங்க.. இது உண்மைதான் – கம்பீர் வெளியிட்ட தகவல்

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானில் விளையாட விரும்புவார்கள் என்றும் பந்துவீச்சாளர்கள் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல எப்படியான ஒத்துழைப்பை கொடுத்தார்கள் என்றும் இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று கைப்பற்றிய. இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீருக்கு இது முதல் பெரிய வெற்றியாகவும் பதிவாகியது. தொடர்ந்து அவருடைய பயிற்சியின் கீழ் இந்தியா சரித்திர படுதோல்விகளை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி மீதான விமர்சனம்

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குறைந்தபட்சம் எல்லா அணிகளும் இரண்டு மைதானங்களில் விளையாடின. ஆனால் இந்திய அணி துபாய் சர்வதேச மைதானத்தில் மட்டுமே விளையாடியது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகத்தை கொடுக்கிறது என பல தரப்பிலும் இருந்து இப்பொழுது வரை குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் துபாய் மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆடுகளம் மெதுவாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் விரும்பியபடி பெரிய ஷாட் விளையாட முடியவில்லை. இருந்த போதிலும் கில் மற்றும் விராட் கோலி இருவரும் தலா ஒரு சதம் அடித்தார்கள். ஆனால் பாகிஸ்தானில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருந்தது. இதனால் துபாயை விட அதிக சதங்கள் அங்கே வந்தன.

- Advertisement -

பாகிஸ்தானில் விளையாட விரும்புவார்கள்

இந்த விமர்சனங்கள் குறித்து பதில் அளித்த கம்பீர் பேசும் பொழுது “துபாயில் கடினமான ஆடுகளத்தில் விராட் கோலி ரோஹித் சர்மா இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பாகிஸ்தானில் விளையாட எங்கள் பேட்ஸ்மேன்கள் விரும்புவார்கள். ஏனென்றால் எங்கு பேட்டிங்கில் தாக்கத்தை செலுத்த முடியுமோ அங்கு விளையாட பேட்ஸ்மேன்கள் விரும்புவது இயல்பான ஒரு விஷயம். நான் அப்படித்தான் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும் வீரர்கள் கிடையாது”

இதையும் படிங்க : ஐசிசி இந்தியாவை நீக்க வேண்டும்.. கிரிக்கெட் யாரோட விளையாட்டு.. அநியாயம் நடக்குது – ஆன்டி ராபர்ட் குற்றச்சாட்டு

“அதே சமயத்தில் பந்து வீச்சில் எங்களுக்கு குல்தீப், வருண் மற்றும் ஷமி மூவரும் உதவி செய்தார்கள். அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அணிக்காக சிறப்பாக விளையாடி கொடுத்தார்கள்” என்று பாராட்டியும் கூறியிருக்கிறார். தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும் கூட ஒரே மைதானத்தில் விளையாடியது குற்றச்சாட்டாக பலராலும் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by

Recent Posts