“இந்தியாவின் மிகச்சிறந்த பவுலிங்.. இப்போ இருக்கிறது இல்ல.. அப்போ இருந்த இவங்கதான்!” – கங்குலி அதிரடி கருத்து!

0
758
Ganguly

இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எட்டு லீக் போட்டிகளில் விளையாடி மொத்தமாக எல்லா போட்டிகளையும் வெற்றி பெற்று இருக்கிறது.

இதுவரை இந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடையாத ஒரே அணியாக இந்திய அணி இருக்கிறது. அரை இறுதியில் இந்திய அணியை சந்திக்கும் எந்த அணியும் லீக் போட்டியில் இந்திய அணி உடன் தோல்வியடைந்திருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போதைய இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக பந்துவீச்சு இருந்து வருவதாக பல முன்னாள் வீரர்களும் கூறி வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் என்பது எப்பொழுதும் பேட்ஸ்மேன்களை சார்ந்து இருக்க கூடியது. இந்திய கிரிக்கெட்டின் எல்லா சூப்பர் ஸ்டார்களும் பேட்ஸ்மேன்கள்தான். ஆனால் தற்பொழுது பேட்ஸ்மேன்களை தாண்டி பந்துவீச்சை ரசிக்கும் அளவுக்கு இந்திய ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இந்த அளவிற்கு இந்திய பந்துவீச்சு படை மிக சிறப்பான தாக்கத்தை போட்டியில் வெளிப்படுத்தி வருகிறது. போட்டியின் எந்த பாகத்திலும் பந்துவீச்சின் இரு முனையிலும் உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் இருவர் இருந்து கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாக எதிரணி பேட்ஸ்மேன்களால் திட்டத்திற்கு தகுந்தபடி விளையாட முடிவதில்லை.

- Advertisement -

மேலும் இந்திய பந்துவீச்சுப் படையில் முகமது சமி விளையாடும் வாய்ப்பை பெற்ற பிறகு, இந்திய பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் இவர்களே இதுவரையிலான உலகக் கோப்பையிலும் இந்திய பந்து வீச்சிலும் மிகச் சிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து பேசி உள்ள கங்குலி கூறும் பொழுது “இதுவரையிலான இந்திய வேகபந்துவீச்சு தாக்குதலில் தற்போது உள்ள கூட்டணியே சிறந்தது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 2003 உலக கோப்பையில் நெக்ரா, ஜாகிர் கான், ஜவஹல் ஸ்ரீநாத் என சிறப்பாக பந்து வீசிய ஒரு கூட்டணி இருந்தது.

ஆனால் பும்ரா, சமி, சிராஜ் இவர்களின் பந்துவீச்சை பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. பும்ரா இருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் ஜோடியாக இணைந்து பந்து வீசுவதால் இருமுனைகளிலும் அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. சமி மற்றும் சிராஜ் மீது பும்ரா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்!” என்று கூறியிருக்கிறார்!