இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் இப்ப ஒரு முக்கியமான வேலையை செய்யறார்.. நிச்சயம் வேற மாதிரி பார்ப்பிங்க – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேச்சு

இந்திய ஒரு நாள் அணியில் ஜெய்ஸ்வால் எப்பொழுது வாய்ப்பு பெறுவார் என்பது குறித்தும் தற்போது அவர் என்ன செய்து வருகிறார்? என்பது குறித்தும் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. அவருடைய இடத்தில் தற்போது நிதீஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு வருவதற்கான காரணம் குறித்தும் சிதான்சு கோடக் விளக்கி இருக்கிறார்.

ஜெய்ஸ்வால் என்ன செய்கிறார்?

இதுகுறித்து சிதான்சு கோடக் கூறும்பொழுது “ஜெய்ஸ்வால் எப்பொழுதும் லெக் ஸ்பின் பந்து வீச்சு செய்து வருகிறார். ஒரு வீரராக அவருக்குள் இருந்து நான் இன்னும் பந்துவீச வேண்டும் என்கின்ற எண்ணம் வந்தால் அது மிகவும் சிறப்பானது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் அவரை கவனித்து வருகிறேன். இப்போது முன்பை விட அவர் நிலையானவராக இருக்கிறார். பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது நல்ல அறிகுறி”

“ஜெய்ஸ்வால் தற்போது அணியில் இருக்கிறார். அணியில் உள்ளவர்களுக்கு தங்களுடைய முறை வரும் என்பது நன்றாக தெரியும். நாள் முடிவில் 11 பேர் மட்டுமே விளையாட முடியும். நீங்கள் உங்களுடைய வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு கிடைக்கும் பொழுது சிறப்பாக விளையாட வேண்டும்”

- Advertisement -

நிதீஷ் குமாருக்கு ஏன் வாய்ப்பு?

“ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவர் இல்லாதது நிச்சயம் ஒரு அணிக்கு பெரிய இழப்புதான். ஆனாலும் அவருடைய காயத்தில் ஒரு பாசிட்டிவ் விஷயம் என்னவென்றால் நிதிஷ்குமார் போன்ற ஒரு இளம் வீரருக்கு விளையாட்டு நேரம் கிடைக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் ஆல்ரவுண்டர் தேவை. இந்த வகையில் அவரை வளர்க்க விரும்புகிறோம்”

இதையும் படிங்க: சர்பராஸ் கானுக்கு அகர்கர் தந்த மோசமான பிறந்தநாள் பரிசு.. ரகானே உதவி செய்வாரா? – என்ன நடந்தது

“நிதிஷ் போன்ற எங்கள் இளம் வீரர்களை எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்கள் நிறைய பயிற்சி செய்கிறார்கள். அது மட்டுமே அவர்களுக்கு போதாது. உங்களுக்கு போட்டி பயிற்சி தேவை. பெரிய அணிக்கு எதிராக தற்போது விளையாடுவது அவருக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by