கம்பீர் செலக்ட் செய்த இந்திய வேர்ல்ட் கப் அணி.. தமிழக வீரருக்கு இடம்.. சஞ்சுவுக்கு இடமில்லை.!

0
3828

2023 ஆம் ஆண்டிற்கான ஐம்பது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கிய நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இது ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையில் 13 வது உலகக்கோப்பை ஆகும்.

கடந்த முறை இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற 12 வது உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் கடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும் நடத்திய நாடே கோப்பையை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறை இந்தியாவில் வைத்து நடைபெறும் போட்டிகளில் இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

உலகக்கோப்பை போட்டிகளுக்கான நாட்களில் நெருங்கிக் கொண்டே இருக்கும் வேளையில் உலகக்கோப்பையில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு ஏராளமான கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்துள்ளனர். ஒரு பலம் வாய்ந்த அணியை உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் துணை கேப்டருமான கௌதம் கம்பீர் தென்னாப்பிரிக்காவில் வைத்து நடைபெற்ற 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றியவர். இந்த இரண்டு உலகக் கோப்பைகளையுமே இந்தியா வென்று இருக்கிறது. இந்த இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும் கௌதம் கம்பீர் இந்திய அணிக்காக அதிகமான ரன்களை எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக சதத்தை மூன்று ரன்களில் தவறவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறார் . அதில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்திருக்கும் கௌதம் கம்பீர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு samsung அணியிலிருந்து நீக்கி இருக்கிறார். பெரும்பாலான முன்னால் வீரர்கள் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கவில்லை என்றாலும் வாஷிங்டன் சுந்தரையும் தங்கள் அணியில் எடுக்கவில்லை. ஆனால் கௌதம் கம்பீர் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை தனது அணியில் சேர்த்திருக்கிறார்.

- Advertisement -

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக ஒரு நாள் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய அவர் சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மன்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகிறது மேலும் அணியில் இருக்கக்கூடிய சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான அக்சர் பட்டியல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் இவர்களில் சற்று மாறுபட்டவர் வாஷிங்டன் சுந்தர் . அவர் ஒரு ஆப் ஸ்பின் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் கம்பீர் தேர்வு செய்திருக்கும் உலகக்கோப்பை கான இந்திய அணி :

ரோஹித் சர்மா ( கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி. கீ.), இஷான் கிஷன் (வி.கீ.), அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி