ஷஃபாலி வர்மாவின் சிறப்பான பந்துவீச்சில் பங்களாதேஷ் மகளிர் அணியை 87 ரண்களில் பொட்டலம் கட்டி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!

0
633

இந்திய மகளிர் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரும் நடைபெற இருக்கிறது .

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் டாக்கா நகரில் வைத்து தொடங்கியது . இந்தப் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் விளையாடிய இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது . இந்திய அணியின் எந்த ஒரு வீராங்கனையும் 20 ரன்கள் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 19 ரண்களும் அமன்ஜோத் கவுர் 14 ரண்களும் எடுத்தனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் சுல்தானா கா காத்துன் மூன்று விக்கெட்டுகளையும் பாத்திமா காத்துன் இரண்டு விக்கெட் களையும் வீழ்த்தினர் . இதனைத் தொடர்ந்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 87 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா எட்டு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

6 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதி ஓவரை வீசிய ஷஃபாலி வர்மா வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ரன் அவுட் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகளையும் ஷஃபாலி வர்மா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது .