ஜெய்ஸ்வால் 6.. ரச்சின் ரவீந்தரா 4.. 240 ரன்.. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து ரன் குவிப்பு

0
117
Rachin

தற்பொழுது இளம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சென்று இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரில் விளையாட நியூசிலாந்து சென்று இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியில் அனுபவ வீரர்கள் என்று யாரும் கிடையாது. தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக்கில் அனைத்து முன்னணி தென் ஆப்பிரிக்க வீரர்களும் விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக அதிரடியாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்கள் கொண்ட அணியை நியூசிலாந்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட அனுப்பி வைத்திருக்கிறது. இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு நீல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று துவங்கிய இந்த போட்டியில் முதலில் டாசியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ரச்சின் ரவீந்தரா நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டு இருந்தார்.

நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் 20, டெவோன் கான்வே 1 என சீக்கிரத்தில் வெளியேறினார்கள். ஆனால் கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் சேர்ந்து நேற்று முழுக்க மேற்கொண்டு விக்கட்டையே விழவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். மேலும் இருவரும் சதத்தை தாண்டினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இன்று இரண்டாம் நாள் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இந்த ஜோடியை வில்லியம்சன் 118 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்வர்ட் பிரித்தார். ஆனாலும் ரச்சின் ரவீந்திரா அதிரடி நிற்கவில்லை.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 150 ரன்களை தாண்டி 200 ரன்கள் எடுத்தார். தன்னுடைய முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை அடித்த அவர் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடி 366 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 240 குவித்து ஆட்டம் இழந்தார்.

இறுதியாக நியூசிலாந்து அணி 144 ஓவர்கள் விளையாடி 511 குவித்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க கேப்டன் நீல் பிராண்ட் ஆர் விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : U19 உலககோப்பை.. அரையிறுதி போட்டி அட்டவணை.. இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான வாய்ப்பு.. முழு தகவல்கள்

நேற்று முன்தினம் தனது ஆறாவது டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் டெஸ்ட் இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இன்று அதே போல் இளம் இடது கை ஆட்டக்காரர் ரட்சி ரவீந்தரா நான்காவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை அடித்திருக்கிறார். இதற்கு முன் இவரது டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோர் 18 என்பது குறிப்பிடத்தக்கது.