இந்திய டாக்ஸி டிரைவர் மகனுக்கு உலக கோப்பை ஆஸி அணியில் இடம்.. யார் இந்த சங்ஹா?

0
1072
Sangha

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு முன்பாக செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகள் உடனும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.

இதில் இறுதியாக இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மண்ணில் விளையாட இருக்கிறது. இந்த குறிப்பிட்ட தொடர் 2 அணிகளுக்குமே மிகவும் முக்கியமான ஒரு தொடர். இந்திய அணி உலக கோப்பை நடக்கும் தமிழ்நாட்டில் பெரிய அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முழு அணியை கொண்டு விளையாடி பார்க்கும். மேலும் ஆஸ்திரேலியா அணி இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுடன், உலகக்கோப்பை நடக்கும் நாட்டில் விளையாடுவது பெரிய பயிற்சியாக அமையும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரண்டு தொடர்களுக்கும் சேர்த்து 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இன்று காலை அறிவித்திருந்தது. இதில் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாக இருக்கிறார். டி20 அணிக்கு மிட்சல் மார்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த 18 பேர் கொண்ட அணியில் மார்னஸ் லபுஷேனுக்கு இடம் அளிக்கப்படவில்லை. மேலும் தன்வீர் சங்ஹா என்ற ஒரு வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த 18 பேர் கொண்ட அணியில் இருந்துதான் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வலது கை மர்ம சுழல் பந்துவீச்சாளரான 21 வயதான தன்வீர் சங்கா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர். இவரது தந்தை ஜலந்தர் மாவட்டம் ரகிம்பூரை சேர்ந்தவர். இவர் 1997 ஆம் ஆண்டு சிட்னிக்கு சென்று அங்கு டாக்ஸி டிரைவராக வேலை செய்தார். இவரது தாயார் அக்கவுண்டன்ட்.

- Advertisement -

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்ற இவர் 15 விக்கெட் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இவருக்கு இதே ஆண்டில் ஆஸ்திரேலியா உள்நாட்டு சிவப்பு பந்து தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

மேலும் பிபிஎல் டி20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, அங்கும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அத்தோடு 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு ஆஸ்திரேலிய 15 பேர் கொண்ட அணியில் இடம் அளிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை நடைபெற இருக்கின்ற காரணத்தால், வலது கை லெக் ஸ்பின் மற்றும் மிஸ்டரி ஸ்பின்னர் ஆன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அணியில் சேர்த்திருக்கிறது. இவர் 18 பேர் கொண்ட அணியில் இருந்து வடிகட்டப்பட்டு 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.