எனக்கு கேப்டனா இந்த மாதிரி இருக்கிறது புடிக்கல.. அவர் ஆடுன மாதிரி விளையாட ஆசைப்படுறோம் – சூரியகுமார் பேட்டி

0
624

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக திகழ்ந்து வரும் சூரியகுமார் யாதவ் தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பு குறித்தும் மற்றும் ரோஹித் சர்மா குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பெயருக்கு மட்டும் கேப்டன்

இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய பிறகு டி20 ஃபார்மெட்டில் இருந்து ரோஹித் சர்மா தனது ஓய்வினை அறிவித்தார். அதற்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு சூரியகுமார் யாதவிடம் வழங்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பை சிறப்பாக செய்து வரும் சூரியகுமார் யாதவ், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதோடு தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெற வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் முதல் டி20 போட்டிக்குப் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சூரியகுமார் யாதவ் வெறும் பெயருக்கு மட்டும் கேப்டனாக இருப்பதை விட ஒரு அணிக்கு சிறந்த தலைவராக இருக்க ஆசைப்படுகிறேன் எனவும், பயிற்சியாளர் கம்பீர் உடனான பிணைப்பு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் ஷர்மா பாணி கிரிக்கெட்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பை நான் ரசித்து விளையாடுகிறேன். எனது பயிற்சியாளரும், அணியும் எனது பொறுப்பை எளிதாக்குகின்றனர். கேப்டன் பதவியை நான் மிகவும் நேர்மறையாக உணர்கிறேன். அதேபோல கேப்டன் பொறுப்பினால் எனது குண நலனை நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. முன்பு எப்படி விளையாடினேனோ அதேபோல தற்போது விளையாட விரும்புகிறேன். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரே மாதிரியாக இருக்க முயற்சிக்கிறேன்.

வெறும் பேப்பரில் மட்டும் கேப்டனாக இல்லாமல் சிறந்த தலைவராக இருக்க முயற்சிக்கிறேன். நான் எப்போதும் மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனது முந்தைய கேப்டன்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன். பயிற்சியாளர் கம்பீருக்கும் எனக்கும் இடையே நல்ல பிணைப்பு உள்ளது. அவர் எப்போதும் என் திறமைகளை ஆதரிக்க கூடியவராக இருக்கிறார். நான் நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும் எனது உடல் மொழியால் அவர் புரிந்து கொள்கிறார்.

இதையும் படிங்க:ஆஸி இந்திய அணிக்கு கிட்ட உஷாரா இருங்க.. அவங்க அந்த முடிவை எடுத்தா கதை முடிந்தது – இயான் மோர்கன் கருத்து

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடியதை போலவே நாங்கள் அதே வகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். அந்த தன்னலமற்ற பிராண்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடினால் நாங்கள் அதிக வெற்றிகளை பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. ரோகித் சர்மா ஒரு சிறந்த கேப்டன், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -