இந்திய அணி அதிரடியாக விளையாட முடிவெடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய சிரமமாக மாறிவிடும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்து மொத்தமா ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் அணுகுமுறை தொடர்ந்தால் ஆஸ்திரேலியா அணி சிரமப்படும் என இயான் மோர்கன் கூறி இருக்கிறார்.
உள்நாட்டில் ராஜாங்கம் நடத்தும் இந்திய அணி
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காயிரம் நாட்களுக்கும் மேலாக உள்நாட்டில் மேலாக டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்து வரும் ஒரே அணியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் 1200 நாட்களில் தென் ஆப்பிரிக்க அணி இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
இந்த அளவிற்கு இந்திய அணி உள்நாட்டில் யாராலும் வெல்ல முடியாத அணியாக விளங்கி வருகிறது. அதே சமயத்தில் கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியா சென்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வந்திருக்கிறது. இப்படி உள்ளே வெளியே என இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக இருப்பதற்கு, இந்திய அணியின் பாஸ்ட் பவுலிங் யூனிட் சிறப்பாக இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி அதிரடியாக ஆடினால் முடிந்தது
இதுகுறித்து இயான் மோர்கன் கூறும்பொழுது ” இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடியது போல் அதிரடியாக விளையாட முடிவெடுத்தால், ஏற்கனவே உடல் தகுதியில் சிரமப்படும் நாதன் லயனை குறி வைத்து அவர்கள் தாக்குதல் பாணியில் விளையாடினால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியினர் நிறைய கேள்விகளை கேட்பார்கள்”
“இந்திய அணி சொந்த நாட்டில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய அணியாக கருதப்பட வேண்டும். அவர்களை மிகச்சிறந்தவர்களாக மாற்றுவது விளையாட்டின் மீது இருக்கும் அவர்களது பசி மற்றும் வெற்றிக்கான அவர்களது ஆசையும்தான். அதைப்பற்றிய அவர்களது அணுகுமுறை ஒரு பொருட்டானது இல்லை”
இதையும் படிங்க : என்னுடைய மந்திரம் புரியாம இருக்கிங்க.. ரெண்டு வருஷமா என்ன நடந்துச்சுனே தெரியல – அர்ஷ்தீப் சிங் பேட்டி
“நாங்கள் சொந்த நாட்டில் பெரிய நன்மைகளைக் கொண்டுள்ள கிரிக்கெட் நாடாக இருந்து வருகிறோம். ஆனால் இருந்தாலும் கூட இந்தியர்களைப் போல நாங்கள் என்றும் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை கொண்டிருக்கவில்லை” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.






