டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத 8 பிரபல இந்திய வீரர்கள்

0
1876
Chahal and Shreyas Iyer

நம் இந்திய நாட்டில் நாளுக்குநாள் புதிய கிரிக்கெட்டர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதன் காரணமாக ஒரே நேரத்தில், இலங்கை மற்றும் இங்கிலாந்தில் இரு அணிகளைக் கொண்டு இந்திய ஆடியது. ஐ.பி.எல் தொடர், புதிய இளம் வீரர்களை அளிக்கிறது. இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறப்பாக ஆடிய வீரர்கள், தேசிய அணியிலும் அதே போல் செயல்படுகிறார்கள்.

ஐ.பி.எல் மூலம் வந்த பெரும்பாலான வீரர்கள், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு எளிதில் தகுதி பெற இயலாது. இந்திய அணியில் ஆடிய பல பிரபல வீரர்கள் இன்னுமும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

1.யுஸ்வேந்திர சாஹல்

வெள்ளை பந்து கிரிக்கெட்டில், இந்தியாவின் முக்கிய ஸ்பின்னராக சாஹல் திகழ்கிறார். வலதுகை லெக் பிரேக் பவுலரான இவர், ஐ.பி.எலில் பெங்களூர் அணிக்காக ஆடி வருகிரார். யுஸ்வேந்திர சாஹல், இதுவரை 56 ஓடிஐ மற்றும் 49 டி20களில் பங்கேற்றுள்ளார். 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்தியுள்ளார். இவர் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட களமிறங்கவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

2.குருனால் பாண்டியா

ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரரான குருனால் பாண்டியா, சமீபத்தில் தான் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகினார். தம்பி ஹர்திக்கைப் போல இவரும் ஆல்ரவுண்டர் தான். ஆனால் இவர் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னர் ஆவார். குருனால், இதுவரை 5 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், குருனால் பாண்டியா.

3.விஜய் சங்கர்

தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு ஆல்ரவுண்டர், விஜய் சங்கர். மீடியம் பேஸரான இவர், 2019 உலகக் கோப்பையிலும் பங்கேற்றார். சர்வதேச அளவில், இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடத்த தவறியதால், நடப்பு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினால் மட்டுமே டெஸ்ட் கிரகெட் ஆடும் வாய்ப்பு இவருக்கு கிட்டும்.

- Advertisement -

4.கலீல் அஹ்மத்

இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு மிகவும் முக்கியம். அந்த வகையில், ஜாகீர் கான் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டார். அவருக்குப் பின் யாரும் பெரிதாக ஜொலிக்க வில்லை. ஐ.பி.எலில் சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு தேர்வானார் கலீல் அஹ்மத். 11 ஓடிஐ மற்றும் 14 டி20 போட்டிகளில் களமிறங்கினார். கிடைத்த வாய்ப்புகளில் அற்புதமாகவே பந்துவீசினார். அதன் பின்னர் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

5.ஷ்ரேயாஸ் ஐயர்

ஐயர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். மேலும், அவர் டெல்லி அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். பேட்டிங்கில் இந்திய அணிக்காக சிறப்பாக பங்காற்றியுள்ளார். 50க்கும் மேற்ப்பட்ட சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டிலும் இவரது சாதனைகள் வியக்கதக்கவை. வரும் காலங்களில் இவர் நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6.மணிஷ் பாண்டே

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், மணிஷ் பாண்டே. இவரும் இந்திய அணிக்காக பல முக்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 2008ல் விராட் கோஹ்லி தலைமையில் யு-19 உலகக் கோப்பையும் வென்றுள்ளார். 29 ஒருநாள் மற்றும் 39 சர்வதேச டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். முதல் தர போட்டிகளில் 6000 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். மணிஷ் பாண்டேவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் கலமிறங்கவில்லை.

7.கேதார் ஜாதவ்

ஜாதவ், இந்திய அணிக்காக 73 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2020 ஐ.பி.எலில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடத் தவறினார். அதனால் அவர் அணியை விட்டு நீக்கப்பட்டார். தேசிய அணியிலும் தற்போது இவர் இல்லை. 36 வயதான ஜாதவ் இதன் பிறகு டெஸ்ட் அணியில் அறிமுகமாவது சாத்தியம் இல்லாத ஒன்று.

8.மோஹித் ஷர்மா

2015 உலகக் கோப்பை அணியில், மோஹித் ஷர்மா முக்கிய வேகப்பந்து வீச்சாளராக கருதப்பட்டார். அதன் பின்னர் அவர் இந்திய அணியில் தொடர்ந்து ஆடவில்லை. ஐ.பி.எலிலும் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்லை. முதல் தர கிரிக்கெட்டில் 127 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தன்னுடைய கால் தடத்தை இன்னும் பதிக்கவில்லை.