தற்போது நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இழந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கௌதம் கம்பீர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய வீரர்களின் மோசமான ஆட்டம்
இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடரில் பும்ரா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் அறிமுக வீரர் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் மோசமான செயல்பாட்டை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக அணியின் சீனியர் வீரர்களாக கருதப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தோல்வியடைந்தது இந்திய அணியின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இளம் வீரரான சுப்மான் கில் தொடர்ந்து மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், வீரர்கள் அனைவரும் இனி ரஞ்சித் தொடர் மற்றும் இந்தியா உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும் என விரும்புவதாக சில முக்கிய கருத்துகளை கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் இதனை கவனித்த சுனில் கவாஸ்கர் கௌதம் கம்பீர் கூறியது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
கம்பீர் கூறியதை கூர்ந்து கவனிப்பேன்
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கௌதம் கம்பீர் வெறும் வாய் வார்த்தைக்காக இதை சொன்னாரா? என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். அடுத்த 15 நாட்களில் இந்தியாவில் சில உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் நடைபெற இருக்கிறது. பயிற்சியாளர் விரும்புவது உண்மையில் நடக்கிறதா? இந்திய அணி வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்போம். என்ன நடந்தாலும் தங்களை வீழ்த்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டு சில வீரர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க:கான்ஸ்டாஸ் திமிரான வீரர்தான்.. ஆனா அவர்கிட்ட இந்த இன்னொரு ஸ்பெஷல் குணமும் இருக்கு – உஸ்மான் கவாஜா பேட்டி
எனவே பயிற்சியாளரின் கருத்துக்கு உட்பட்டு இந்த வீரர்கள் உள்நாட்டுத் தொடர்களில் விளையாடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கண்டிப்பாக நான் அது குறித்து கூர்ந்து கவனிப்பேன்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டில் இனி நட்சத்திர கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் இளம் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை அணியில் ஊக்குவிக்க வேண்டும் எனவும் சுனில் கவாஸ்கர் காட்டமான கருத்துக்களையும் தெரிவித்து இருக்கிறார். எனவே சீனியர் வீரர்கள் உட்பட இந்திய வீரர்கள் உள்நாட்டு தொடர்களில் விளையாடுவார்களா என்பதை பார்க்கலாம்.






