“இந்திய வீரர்கள் பதட்டமா இருக்காங்க.. 600 ரன் டார்கெட் வச்சாலும் அடிப்போம்” – ஆண்டர்சன் பேட்டி

0
248
Anderson

உலக கிரிக்கெட்டில் 41 வயதில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால் அவர் பேட்ஸ்மேனா இல்லை பந்துவீச்சாளரா என்று முதலில் பார்க்க வேண்டும். அடுத்து அவர் சுழல் பந்துவீச்சாளரா இல்லை வேகப்பந்துவீச்சாளரா என்று பார்க்க வேண்டும்.

ஏனென்றால் இந்த வயதில் வேகப்பந்துவீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் அதுவும் முன்னணியான ஒரு பெரிய அணியில் இருப்பது என்பது மிகவும் கடினம்.

- Advertisement -

பெரிய அணிகளில் வெற்றிக்கு நிறைய அழுத்தம் இருக்கும். எனவே வெற்றியை நோக்கி அவர்கள் மிகக் கடினமான திட்டங்களை உருவாக்குவார்கள். அதற்கு ஒரு வேகப்பந்துவீச்சாளராக உழைப்பதற்கு நிறைய சக்தி தேவை. எனவே 41 வயதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல செயல்படுவது அரிதிலும் அரிதானது.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இதுவரை ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் தொடர்ச்சியாக ஏழு ஓவர்கள் தாண்டி பந்து வீசி இருக்கிறார். 30 ஓவர்கள் கடந்து மொத்தமாகவும் பேசியிருக்கிறார்.

முதல் நாளில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், மூன்றாவது நாள் இன்று இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் சீக்கிரத்தில் வெளியேற்றி, இங்கிலாந்து அணியை எடுத்ததும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

- Advertisement -

இன்றைய ஆட்டம் குறித்து பேசி உள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறும் பொழுது “இன்று இந்திய வீரர்கள் பதற்றமாக இருந்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எவ்வளவு டார்கெட் வைப்பது என்று சரியாக தெரியவில்லை. அவர்கள் பெரிய அளவில் ரன் லீடிங் பெற்றபோதும் கூட கவனமாகவே விளையாடினார்கள்.

எங்களுடைய பயிற்சியாளர்களுடன் நேற்று இரவு நாங்கள் பேசிய பொழுது, இந்தியா 600 ரன்கள் டார்கெட் வைத்தாலும் நாங்கள் அடிக்கப் போகிறோம் என்பதுதான். மேலும் தற்போதுள்ள டார்கெட்டை 60 முதல் 70 ஓவர்களில் நாங்கள் எட்ட முடியும். நாங்கள் வெற்றிக்காக தான் விளையாடுவோம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதையும் படிங்க : 198-10.. 199-1.. இலங்கை அணிக்கு பதிலடி தந்த ஆப்கான்.. இப்ராகிம் ஜட்ரன் ஸ்பெஷல் சதம்

நான் மொத்தமாக 5 விக்கெட் வீழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மூன்று நாட்களில் 35 ஓவர்கள் தாண்டி வீசியதில்தான் நிறைய மகிழ்ச்சி அடைகிறேன். நான் இதைச் செய்த பொழுது என்னை வலிமையானவனாக உணர்ந்தேன். கடந்த சில மாதங்களாக உழைத்ததற்கு வெளிப்படையான பலன்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.