நாளைக்கு நான் டீம்ல இல்லனா என்ன பண்ணுவ?.. கோலி ரோகித்த தோனிதான் காப்பாற்றினார் – சர்துல் தாக்கூர் பேட்டி

0
226
Shardul

இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தாங்கள் வளர்வதற்கு எப்படி ஆதரவு கொடுத்தார்? மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் உருவாவதற்கு அவர் எப்படி முக்கிய காரணமாக இருந்தார்? என்பது குறித்து மிகவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

சர்துல் தாக்கூர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் விளையாடினார். ரன்களை விட்டுத் தரக்கூடியவராக இருந்தாலும் கூட சிஎஸ்கே அணிக்காக போட்டியில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி பெரிய திருப்புமுனைகளை உருவாக்க கூடியவராக இருந்தார்.

- Advertisement -

குறிப்பாக மகேந்திர சிங் தோனி சர்துல் தாக்கூரை பயன்படுத்தக்கூடிய இடங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். பந்து ஸ்விங் ஆகின்ற சூழ்நிலை இருந்தால் பவர் பிளவில் கொண்டு வருவார், இல்லையென்றால் பவர் பிளே முடிந்து அடுத்த ஓவரை கையில் தருவார். அடுத்து பத்தாவது ஓவர் முடிந்து பதினொன்றாவது ஓவருக்கு கொண்டு வருவார். எங்காவது விக்கெட் விழுந்தால் அடுத்த ஓவரை இவர் கையில் தருவார். இப்படி இவரை சரியான முறையில் பாதுகாத்து பந்து வீச வைத்தார்.

இதற்கு அடுத்து ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு மாறிய சர்துல் தாக்கூருக்கு ஐபிஎல் தொடர் பெரிய அளவில் சிறப்பானதாக அமையவில்லை. இந்த நிலையில் மீண்டும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அவர் இணைந்தார். மீண்டும் பழைய சர்துல் தாக்கூரை நம்மால் பார்க்க முடிந்தது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி குறித்து சர்துல் தாக்கூர் கூறும் பொழுது “தோனி உடன் விளையாடுவது எப்பொழுதுமே சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அவர் நாம் வளர்வதற்கு அனுமதிக்கக் கூடியவர். நம்முடைய சொந்த திட்டங்களை கொண்டு வருவதற்கு அனுமதிப்பார். அவர் எப்பொழுதும் எங்களுக்கு ஸ்பூன் வைத்து ஊட்ட மாட்டார.

அவர் எங்களிடம் நான் நாளை ஸ்டெம்புகளுக்கு பின்னால் இல்லாமல் போகலாம், அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே நீங்கள் உங்களுடைய அறைக்குச் சென்று, உங்கள் விளையாட்டு பற்றி யோசித்து, உங்கள் திட்டங்களை கொண்டு வாருங்கள், அது வேலை செய்யவில்லை என்றால் பிறகு நான் தலையிட்டு யோசனை சொல்கிறேன் என்று கூறுவார்.

இதையும் படிங்க : ரகானேதான் நான் சதம் அடிக்க காரணமே.. அந்த உதவிய எனக்கு செஞ்சார் – ஆஸ்திரேலிய வீரர் பேட்டி

அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் மூன்று ஐசிசி கோப்பைகள், பல இளைஞர்களை வளர்த்தெடுத்தது என்று இருக்கிறது. தற்போதைய ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் அவர்தான் வளர்த்தெடுத்தார் என்று நான் சொல்லுவேன். அவர்களை மற்றவர்கள் கைவிட்ட காலமும் இருந்தது. ஆனால் அப்போது தோனிதான் அவர்களை ஆதரித்தார். அவர்கள் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு என்ன செய்திருக்கிறார்கள் என்று நாம் பார்த்தோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -