தற்போது இங்கிலாந்து கவுன்டி சீசனில் ஒருநாள் தொடருக்கான ஒன் டே கப் சீரியஸ் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப் தான் சதம் அடிப்பதற்கு இந்திய வீரர் ரகானே பெரிய உதவி செய்தார் என்று கூறியிருக்கிறார்.
நடைபெற்று வரும் இந்தத் தொடரில் லெய்செஸ்டர்ஷைர் அணி மற்றும் சசக்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாசில் வெற்றி பெற்ற சசக்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லெய்செஸ்டர்ஷைர் அணி முதலில் பேட்டிங் செய்து சிறப்பான ரன்கள் குறித்து அசத்தியது.
அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த இயான் ஹாலந்த் 67 பந்தில் 65 ரன்கள், சோல் புடிங்கர் 77 பந்தில் 84 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த லீவிஸ் ஹில் 10 ரன்னில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து ரகானே மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் இருவரும் ஜோடி சேர்த்து அசத்தலாக விளையாடினார்கள்.
சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரகானே 57 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். பீட்டர் ஹேட்ன்ஸ்காம்ப் அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 119 ரன்கள் குவித்தார். இவர்களுடைய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் சேர்த்தது.
மெகா இலக்கை நோக்கி விளையாடிய சசெக்ஸ் அணியும் சிறப்பாக விளையாடி ஆனால் 353 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தான் சதம் அடிப்பதற்கு இந்திய வீரர் ரகானே மிகவும் முக்கிய காரணமாக இருந்தார் என்று ஆஸ்திரேலியா வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் பாராட்டி கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : நான் வெறித்தனமா கொண்டாட காரணம் இதுதான்.. வெளியே இருந்த அந்த சிலருக்காக செஞ்சேன் – ராகுல் டிராவிட் விளக்கம்
இதுகுறித்து பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் கூறும் பொழுது “ரகானே என்னை மறுமுனையில் மிகவும் அமைதியாக வைத்திருந்தார். எங்களால் கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ரன்கள் குவிக்க முடியும் என்று தெரியும். நாங்கள்இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நூறு ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறோம். ரகானே உடன் பேட்டிங் செய்வது மிகவும் அழகாக இருக்கிறது” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.






