சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு வெளிப்படுத்திய செயல்பாட்டிற்காக சிறந்த கிரிக்கெட் வீரராக மாறி இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட விருதை பெறுகிற முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.
முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து விருதுகள் கொடுப்பது வழக்கம். அதேபோன்று கடந்த ஆண்டும் அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளில் இருந்து வீரர்கள் தங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்புரித் பும்ரா கடந்த ஆண்டு தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் குறிப்பாக கடந்த ஆண்டு 71 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கு தனது அபார பந்துவீச்சின் மூலமாக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பும்ரா பெறுகிறார்.
இது என் இதயத்திற்கு நெருக்கமானது
அதேபோல கடந்த ஆண்டில் மொத்தமாக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய பும்ரா மதிப்புமிக்க சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதையும் வெல்கிறார். இதற்கு முன்பாக இந்த விருதானது ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), ரவிச்சந்திரன் அஷ்வின் (2016) மற்றும் விராட் கோலி (2017, 2018) ஆகியோருக்குப் பிறகு இந்த விருதை வென்ற 5வது இந்திய வீரர் என்ற பெருமையை வேகப்பந்து வீச்சாளர் பெற்றார். மேலும் இதனை முதலாவதாக பெரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:விராட் கேஎல் ராகுல் செஞ்சது விதிக்கு எதிரானது.. உண்மை என்னனு ஊருக்கு தெரியும் – கவாஸ்கர் விமர்சனம்
இது குறித்து பும்ரா கூறும்போது “சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் ஆண்டின் சிறந்த ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருதை வென்றதில் எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு உண்மையிலேயே மறக்க முடியாதது அதிலும் குறிப்பாக டி20 உலக கோப்பையை வென்றது என் இதயத்திற்கு நெருக்கமாக எப்போதுமே இருக்கும். நான் இளைஞனாக இருந்த போது பல ஹீரோக்கள் இந்த விருதை வென்றதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் இந்த விருதை பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






