விராட் கேஎல் ராகுல் செஞ்சது விதிக்கு எதிரானது.. உண்மை என்னனு ஊருக்கு தெரியும் – கவாஸ்கர் விமர்சனம்

0
75
Gavaskar

நடப்பு ரஞ்சி டிராபி இரண்டாம் கட்ட ஆரம்பப் போட்டிகளில் விராட் கோலி, முகமது சிராஜ் மற்றும் கேஎல்ராகுல்ஆகியோர் விளையாடாதது காயத்தால் இல்லை என சுனில் கவாஸ்கர் மறுத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த வாரங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அதில் மிக முக்கியமாக இந்திய வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடாமல் மற்றும் காயம் இல்லாமல் இருந்தால் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் என்று உறுதியாக கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

விளையாடாத மூன்று வீரர்கள்

இப்படியான நிலையில் இந்திய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் கடந்த வாரத்தில் துவங்கின. இதில் இந்திய நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் மற்ற நட்சத்திர வீரர்களான விராட் கோலி கேஎல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் விளையாடவில்லை. இது குறித்து சரியான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது சுனில் கவாஸ்கர் இவர்கள் மூவர் விளையாடாதது குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

உண்மை என்ன? என்பது தெரியும்

இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கடந்த வாரத்தில் ரஞ்சி டிராபியில் விளையாடாத விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் மூவரும் அடுத்து விளையாடுவார்களா என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். அவர்கள் விளையாடாவிட்டால் பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கும்? என்பதை பார்க்கவும் சுவாரசியமாக இருக்கும். அவர்கள் காயமடைந்தார்களா? மருத்துவ சான்றிதழ் பெற்றார்களா? அப்படி என்றால் நிதிஷ்குமார் ரெட்டி போல அவர்கள் என்சிஏ சென்றார்களா?”

இதையும் படிங்க : 59 பந்து 110 ரன்.. இந்திய வீராங்கனை திரிஷா வரலாற்று சாதனை.. U19 மகளிர் டி20 உலக கோப்பை

“பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருக்கும் வீரர்கள் காயமடைந்தால் உடனே என்சிஏவிடம் புகார் செய்ய வேண்டும். பிறகு வீரர்கள் காயத்தில் குணமடைந்து விட்டார்கள் என என்சிஏ சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே அவர்கள் அடுத்து போட்டியில் விளையாட முடியும். இப்படி இருக்கும் பொழுது இவர்கள் மூவருமே காயத்தின் காரணமாக கடந்த ரஞ்சிப் போட்டியில் விளையாடவில்லை என்பது கிடையாது. இவர்கள் தனிப்பட்ட காரணத்தால்தான் விளையாடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை” என விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -