இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய 6 வீரர்கள்

0
4471
Ravi Rampaul

சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த நாட்டிற்க்கு ஆட வாய்ப்புக் கிடைக்காமல் பல வீரர்கள் மற்ற நாடுகளின் குடியுரிமை பெற்று அங்கு விளையாடச் செல்வர். 2019 உலக கோப்பை இறுதிப் போட்டியின் நாயகன் பென் ஸ்டோக்ஸ் எதிரணியான நியூசிலாந்து நாட்டை பூர்வீகமாக கொண்டவர். இங்கிலாந்து அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களே. இதே போல் மேற்கிந்திய தீவுகள் அணியிலும் ஒரு சில வீரர்கள் உள்ளனர்.

1975ல் முதல் உலகக்கோப்பை நடைபெற்றது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பையை கைப்பற்றியது. அதற்கு அடுத்த வருடமும் அவர்களே கோப்பையை தக்க வைத்துக் கொண்டனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்றுள்ளனர். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர்களால் பெரிதாக சோபிக்க இயலவில்லை. மேற்கிந்திய தீவுகளின் ஒரு சில சிறந்த வீரர்கள் இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

1. ராம்நரேஷ் சர்வான்

இவர் இந்திய – கயானீஸை சேர்ந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் 87 டெஸ்ட், 181 ஒருநாள் போட்டிகள் மற்றும் 18 டி20களிள் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 42 சராசரி வைத்துள்ளார். ஐ.பி.எலில் பஞ்சாப் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளார். மூன்று போட்டிகளில் 97.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 73 ரன்கள் அடித்துள்ளார்.

2. ஷிவ்நரைன் சந்தர்பால்

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைசிறந்த வீரர்களில் சந்தர்பாலும் ஒருவர். கிரீஸில் இவர் நிற்கும் விதத்திற்க்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவரது சராசரி 51.77 ஆகும்.

- Advertisement -

டெஸ்ட்டில்‌ ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 பந்துகளில் சதம் விளாசினார். அதிவேக சதம் விளாசிய வீரர்களில் இவர் 6வது இடத்தில் உள்ளார். இதுபோல் பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். தற்போது இவரது மகன் டேஜனரின் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தயாராகி வருகிறார்.

3. அட்ரியன் பரத்

இவரும் இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டு மேற்கிந்திய அணிக்காக ஆடியவர். ஐ.பி.எலில் இவர் பஞ்சாப் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி உள்ளார். 2009ல் இவர் அறிமுகமானார். வலது கை பேட்ஸ்மேனான இவர் மூன்று ஐ.பி.எல் போட்டிகளில் 42 ரன்கள் அடித்துள்ளார். அட்ரியன் பரத்துக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை.

4. தினேஷ் ராம்தின்

மேற்கிந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின். மூன்று வித பார்மட்டிலும் இவர் விளையாடினார். மேற்கிந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக இவரே முதலில் தேர்வு செய்யப்பட்டார். இவர் 74 டெஸ்ட், 139 ஒருநாள் போட்டி மற்றும் 71 டி20களில் பங்கேற்றுள்ளார். தினேஷ் ராம்தின் ஐ.பி.எலில் விளையாடியது இல்லை.

5. சுனில் நரைன்

கிரிக்கெட்டின் நட்சத்திர ஸ்பின்னர் நரைன். ஸ்பின்னராக மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அவ்வப்போது பங்களித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கிந்திய அணிக்காக இவர் தற்போது விளையாடவில்லை. ஐ.பி.எலில் சுனில் நரைன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு வாங்கபட்ட வீரர் இவர்.

6. ரவி ராம்பால்

வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மேற்கிந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 195 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். 2011 உலகக் கோப்பையில் இவர் பங்கேற்றார். ரவி ராம்பால், ஐ.பி.எலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் தேர்வு செய்யப்பட்டார். 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 2014க்கு பின்னர் அவர் ஐ.பிஎல் தொடரில் கலந்து கொள்ளவில்லை.

- Advertisement -