பிசிசிஐ ரொம்ப ஓவர்.. இந்த டி20 தொடர் தேவையா.? இப்படி இருந்தா எப்படி உள்நாட்டு கிரிக்கெட் வளரும் – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

0
204

இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்ததாக ஆஸ்தேரிலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்னதாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய ஏ அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐயின் தொடர்ச்சியான விளையாட்டு அட்டவணை

இந்திய சீனியர் வீரர்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வரும் நிலையில் உள்நாட்டு வீரர்களை உள்ளடக்கிய இந்தியா ஏ அணி தற்போது திலக் வர்மா தலைமையில் எமர்ஜிங் ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் விளையாட தீவிரம் காட்டி வருகிறது. இதில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா போன்ற முன்னணி வீரர்கள் விளையாட இருக்கின்றனர்.

அதேபோல இதற்குப் பிறகு சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதற்குப் பிறகு இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு நான்கு நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளன. இந்த சூழ்நிலையில் தற்போது 2024 – 2025 காண ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்கி இருக்கும் நிலையில் பிசிசிஐ திட்டமிட்ட இந்த அட்டவணை ரஞ்சி டிராபி தொடரை மதிப்பிழக்கும் வகையில் செய்திருப்பதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

- Advertisement -

50 முதல் 60 வீரர்கள் வரை கிடைக்க மாட்டார்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நியூசிலாந்து அணிக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடும் நிலையில் நமது வீரர்கள் வளர்ந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றனர். தற்போது ரஞ்சி டிராபி சீசன் தொடங்கியுள்ள நிலையில் இதுபோல நிகழ்வுகளில் விளையாட வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் தேசியப் போட்டி மிகவும் மதிப்பிழக்கப்படுகிறது.

இதையும் படிங்க:வெறும் 10 ஓவர்.. 20 பந்தில் அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம்.. இந்தியா யுஏஇ அணியை வென்றது.. எமர்ஜிங் ஆசியா கப் 2024

அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவில் தேவையில்லாத நான்கு டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் ஒரு இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. எனவே தேசிய தொடரான ரஞ்சி டிராபி போட்டியில் அந்தந்த மாநிலங்களுக்கு 50 முதல் 60 வீரர்கள் கிடைக்க மாட்டார்கள். இந்தியாவைப் போல வேறு எந்த பெரிய நாடும் அதன் தேசியப் போட்டிகளை இவ்வளவு வீரியத்துடன் நடத்துவதில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -