தற்போது நடைபெற்று வரும் எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் தற்போது ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது பிரிவில் பாகிஸ்தான் அணியை நேற்று முன்தினம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தரப்பில் எட்டு பவுலர்கள்
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு ராகுல் சோப்ரா 50 பந்தில் 50 ரன், கேப்டன் பசில் ஹமீத் 12 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். இறுதியாக யுஏஇ அணி 107 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இன்றைய போட்டியில் இந்திய தரப்பில் மொத்தம் 8 பந்துவீச்சாளர்கள் பந்து வீசினார்கள். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் நெகேல் வதேரா வரை பந்து வீசவைக்கப்பட்டார். இந்திய பந்துவீச்சு தரப்பில் ராசிக் சலாம் மூன்று மற்றும் ரமன்தீப் ப் சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னி எடுத்த அபிஷேக் ஷர்மா
இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து விளையாட வந்த கேப்டன் திலக் வருமா தன்னுடைய பங்குக்கு 18 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்தில் அதிரடியாக அரைசதம் அடித்தார். மொத்தம் 24 பந்துகள் சந்தித்து அதில் ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 241 ஸ்ட்ரைக் ரேட்டில் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே தொடர்.. பாகிஸ்தான் கிரிக்கெட் எடுத்த வித்தியாசமான முடிவு.. பாபர் அசாம் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் பின்னடைவு
இதைத்தொடர்ந்து இந்திய அணி 10.5 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி ஏறக்குறைய அரை இறுதி எட்டிவிட்டது என்று கூறலாம். மேலும் பாகிஸ்தான் மற்றும் யுஏe அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்கள் அடுத்து அரையிறுதிக்கு இந்திய பிரிவில் முன்னேறுவார்கள்.






