இது எல்லாம் அநியாயத்தின் உச்சம்.. பிசிசிஐக்கு புகார் அளித்த ரோகித்,கோலி.. பயிற்சி முகாமும் புறக்கணிப்பு

0
10730

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை தற்போது வென்றுள்ள நிலையில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இன்று முதல் விளையாடுகிறது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் இல் இந்திய அணி வீரர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற டோமினிகாவில் ஸ்டேடியத்திற்கும் வீரர்கள் தங்க வைக்கப்பட்ட ஹோட்டலுக்கும் ஒரு மணி நேரம் பயணம் செய்யும் வகையில் தூரம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த உடனையே இந்திய அணி வீரர்கள் ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக பார்படாஸ் நாட்டிற்கு சென்றனர்.

- Advertisement -

போட்டி முடிந்தவுடன் இரவு 8 மணிக்கு டிரிண்டாட் விமான நிலையத்திற்கு வந்த இந்திய வீரர்கள் சுமார் இரவு 3 மணிக்கு தான் விமானத்திலேயே ஏறி இருக்கிறார்கள். சுமார் 6 மணி நேரம் விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்கள் காக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதனால் கடுப்பான இந்திய அணி வீரர்கள் அதிகாலை தான் பார்பிடாஸ்க்கு வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து அங்கு வந்த இந்திய அணி வீரர்கள் ஓய்வு இல்லாமல் தாங்கள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டதால், இன்று பயிற்சி முகாமில் பங்கேற்க போவதில்லை என்று புறக்கணித்து விட்டார்கள்.

மேலும் இது தொடர்பாக பிசிசிஐக்கு கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஒரு புகார் கடிதத்தையும் அனுப்பி இருக்கிறார்கள். அதில் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தங்களுக்கு ஓய்வு வேண்டுமென்றும் இனி இரவு நேரத்தில் நாங்கள் பயணத்தை மேற்கொள்ள மாட்டோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

நேற்று விமான நிலையத்தில் ஆறு மணி நேரம் விமானத்திற்காக காத்திருந்ததாகவும் இதனை தடுக்க இனி பகலில் பயணத்தை வைக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். இதனை அடுத்து பிசிசிஐ வீரர்களின் பயண நேரத்தை இரவில் இருந்து காலைக்கு மாற்றி இருக்கிறது. இந்த தவறு இனி நடக்காது என்றும் பிசி சிஐ உத்திரவாதம் அளித்திருக்கிறது.