இந்திய கிரிக்கெட்

ஓவல் ஆடுகள தயாரிப்பாளர் செஞ்சது தப்பு.. 4 போட்டியில இது எங்கயும் நடக்கல – கேப்டன் கில் வருத்தம்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆடுகளத் தயாரிப்பாளர் இந்திய பயிற்சியாளர் குழுவிடம் நடந்து கொண்ட முறை சரியானது இல்லை என இந்திய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக நேற்று ஓவல் மைதான ஆடுகளத் தயாரிப்பாளர் மற்றும் இந்திய தலைமை வீச்சாளர் கம்பீர் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை எதனால் உருவானது?

நேற்று மைதானத்தில் ஆடுகளத்தை இந்திய பயிற்சியாளர் குழு பார்வையிட்டது. அப்பொழுது ஜாக்கிங் செல்வதற்கு பயன்படுத்தப்படும் காலணிகளை இந்திய பயிற்சியாளர் குழு அணிந்திருந்தது. இத்தகைய காலணிகளை பயன்படுத்தி ஆடுகளத்தின் அருகில் நடக்கலாம். எந்த தடையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் கூட ஓவல் ஆடுகளத் தயாரிப்பாளர் இந்திய பயிற்சியாளர் குழுவிடம் கடுமையாக நடந்து கொண்டார். காரணமாக இந்திய தலைமை வீச்சாளர் கம்பீர் கோபமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு இந்திய பேட்டிங் பயிற்சியாளர் நடுவில் வந்து சமரசம் செய்து வைத்தார்.

- Advertisement -

கில் தெரிவித்த கருத்து

இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கில் பேசும் பொழுது “ஆடுகளத்தில் இருந்து 2.5 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும் என எந்த விதமான கட்டுப்பாடுகளும் எனக்கு தெரிந்து இங்கு விதிக்கப்படவில்லை. நீங்கள் வெறுங்காலுடன் இருந்தாலோ அல்லது ரப்பர் காலணிகள் பயன்படுத்தி இருந்தாலும் தாராளமாக ஆடுகளத்தைச் சுற்றி நடக்கலாம். இதுவரையில் இப்படித்தான் விதிகள் இருக்கிறது”

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்டில் விலகலுக்கு ஸ்டோக்ஸ் சொன்ன காரணம்.. ஜடேஜாவிடம் கை குலுக்க சென்றது ஏன் என விளக்கம்

“இந்த நிலையில் ஆடுகளத் தயாரிப்பாளர் எங்களை ஏன் இப்படி தடுத்தார் என்று தெரியவில்லை? நாங்கள் தற்போது இங்கிலாந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கிறோம். எங்களை எந்த ஆடுகளத் தயாரிப்பாளரும் இப்படி தடுக்கவில்லை. நாங்கள் இங்கு தேவையான அளவு கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். ஆடுகளங்களை ஆய்வு செய்திருக்கிறோம். ஆனால் இந்த பரபரப்பு ஏன் உருவாக்கப்படுகிறது என்று புரியவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Shubman Gill