5வது டெஸ்ட்டில் விலகலுக்கு ஸ்டோக்ஸ் சொன்ன காரணம்.. ஜடேஜாவிடம் கை குலுக்க சென்றது ஏன் என விளக்கம்

0
348

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகிய நிலையில், தமக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம் மோசமான அட்டவணை தான் என்று குற்றம் சாட்டியிருக்கின்றார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த சூழலில் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். இந்திய அணி தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால் கடைசி டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும். இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் செய்தியாளரிடம் பேசிய கேப்டன் ஸ்டோக்ஸ், “தமக்கு தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.”

- Advertisement -

அட்டவணை தான் காரணம்:

“இதனால் ஐந்தாவது டெஸ்டில் நான் விளையாடவில்லை. தொடரை என்னால் முடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. எனினும் ஐந்தாவது டெஸ்ட் முடியும் வரை நான் அணியுடன் தான் இருப்பேன். போட்டி முடிவடைந்த பிறகு என்னுடைய உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் நான் ஈடுபடுவேன்.”

“ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவேளை இருக்க வேண்டும். நாங்கள் களத்தில் அதிக அளவு நேரத்தை செலவிடுகின்றோம். அதிக நேரம் பந்து வீசுகின்றோம். இதனால் எங்களுடைய உடல் தகுதி மேம்பட வேண்டும் என்றால், ஒரு டெஸ்ட் போட்டிக்கும் மற்றொரு டெஸ்ட் போட்டிக்கும் நான்கு மற்றும் ஐந்து நாட்கள் ஓய்வு கண்டிப்பாக தேவை.”

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் விளக்கம்:

“ஆனால் மூன்றாம் டெஸ்ட்க்கும், நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் சம்பந்தமே இல்லாமல் 9 நாட்கள் வரை ஓய்வு இருந்தது. இதற்கு பதில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருந்தால், அது சிறப்பாக இருக்கும்”என்று கூறினார்.
இதுபோன்று நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதத்தை நெருங்கும் போது தாங்கள் ஏன் கைகுலுக்க சென்றீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதையும் படிங்க: 5வது டெஸ்ட்.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. ஸ்டோக்ஸ் விலகல்.. 4 அதிரடி மாற்றங்கள்.. முழு விவரங்கள்

அதற்கு பதிலளித்த ஸ்டோக்ஸ், “ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சதத்தை அடிக்க விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கின்றேன். எனினும் நாங்கள் அதிக நேரம் களத்தில் இருந்ததால், எங்கள் பவுலர்களை மேலும் பந்து வீச வைக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் நாங்கள் போட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தோம். இந்த பிரச்சனையிலிருந்து நாங்கள் கடந்து வந்து விட்டோம். இந்தியாவும் மறந்து இருப்பார்கள். இந்த டெஸ்ட் தொடர் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது. எனவே அந்த 20 நிமிடத்தை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -