ஐபிஎல் பாத்தவங்க ஏமாற போறாங்க.. எங்க கிட்ட இதெல்லாம் எதிர்பாக்காதிங்க – ரோகித் சர்மா பேச்சு

0
238
Rohit

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியை விளையாட இருக்கும் சூழலில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இது குறித்து பேசி இருக்கிறார்.

உலகின் பெரும்பாலான முக்கிய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பி வருகிறார்கள். இந்திய அணி வீரர்களும் அடக்கம். அங்கு மிக எளிதாக பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடிந்தது. ஆனால் தற்பொழுது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சூழலில் பேட்ஸ்மேன்கள் எடுப்பதற்கு சாதகம் இல்லை.

- Advertisement -

தற்போது இது குறித்து பேசி இருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா “நிச்சயமாக இது எளிதாக ஸ்கோர் செய்யக்கூடிய இடமாக தெரியவில்லை. எனவே நாங்கள் இது குறித்து கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நாங்கள் என்ன செய்ய முடியும் சென்று பார்க்க வேண்டும். டிரெஸ்ஸிங் ரூமில் நிறைய அனுபவம் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் அனைவரும் ஐபிஎல் விளையாடி விட்டு வந்திருக்கிறோம். நிறைய ஸ்கோர்கள் எடுக்கப்பட்டன. எனவே சமநிலையை தக்க வைப்பது மிகவும் முக்கியமானது. இங்கே என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கு பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடியாது. எனவே நாங்கள் கவனமாக இருக்கிறோம். நிலைமையை மதிப்பிட்டு அதற்கான விளையாட்டை விளையாட வேண்டும்.

நாங்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய போது எங்கள் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் வீசினார்கள். அவர்கள் பந்துவீச்சை விளையாடுவது சிரமமாக இருந்தது. மேலும் இலங்கை தென் ஆப்பிரிக்க போட்டியிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்றினார்கள். இங்கு நிலைமைகள் குறித்து யாருக்கும் தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ஷிவம் துபே கபில்தேவ் மாதிரி.. ஆனா இம்பேக்ட் பிளேயர் விதி வெட்கக்கேடானது – ஸ்டீபன் பிளமிங் பேட்டி

என்னை பொறுத்தவரை நான் முன்னால் போய் என்னுடைய வழியில் விளையாட போகிறேன். மேலும் எல்லோரையும் ஒரு குழுவாக விளையாட வைக்க முயற்சி செய்வேன். அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் உலகக் கோப்பை மாதிரியான தொடர்களில் விளையாடுவதற்கு தனி வழி இருக்கிறது. அவர்கள் சரியான முறையில் செல்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.