ஷிவம் துபே கபில்தேவ் மாதிரி.. ஆனா இம்பேக்ட் பிளேயர் விதி வெட்கக்கேடானது – ஸ்டீபன் பிளமிங் பேட்டி

0
200
Dube

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஷிவம் துபே குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியிருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் ஷிவம் துபே சேர்க்கப்பட்டு ஆச்சரியம் அளிக்கும் விதமாக ரிங்கு சிங் நீக்கப்பட்டார். ஷிவம் துபே பகுதி நேர பந்துவீச்சாளராக வந்து பேச முடியும் என்பது அவருக்கு டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் அவருடைய பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் மிடில் வரிசையில் சுழல் பகுதி வீச்சாளர்களுக்கு எதிராக பெரிய சிக்ஸர்கள் அடிக்க கூடியவராக இருக்கிறார். சிஎஸ்கே அணியில் இந்த ரோலை அவர் மிகச் சிறப்பாக செய்து வந்தார். அதே சமயத்தில் அவருக்கு இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக சிஎஸ்கே அணியில் பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி இருந்தார்.

மேலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் அவரை ஒரு மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஆகவே பார்க்கிறார்கள். அவரும் தொடர்ந்து வலை பயிற்சியில் பந்து வீசி வருகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணையின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் இவர் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஸ்டீபன் பிளமிங் பேசும்பொழுது “அவருடைய பந்துவீச்சு மற்றும் அவர் உழைக்கும் விதம் குறித்து பேசினால் அவர் கபில்தேவ் போன்றவர். அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் கடினமாக உழைத்து இருந்தார். ஆல் ரவுண்டு வேலையைச் செய்யக்கூடிய பலவீரர்கள் எங்களிடம் இருந்தார்கள். இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக துரதிஷ்டவசமாக பயன்படுத்த முடியவில்லை. இந்த விதி ஆல்ரவுண்டர்கள் மற்றும் பகுதி நேர பவுலர்கள் வேலையை குறைக்கிறது. இது உண்மையில் வெட்கக்கேடானது.

இதையும் படிங்க : 18.4 ஓவர்.. கலக்கலாக ஆரம்பித்த நெதர்லாந்து.. பயமில்லாமல் ஆடிய நேபாள்.. சிறப்பான முடிவு

அவர் தனது பந்துவீச்சை தொடர்ந்து செய்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும். அங்கு அவர் மெதுவான பந்துகளையும் கட்டர்களையும் வீசும் பொழுது அவர் ஒரு நல்ல பங்கை அணியில் பந்துவீச்சில் வைத்திருக்க முடியும். அவர் செய்யக்கூடிய வேலையில் அவர் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -