100 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக தயாரா இருந்தேன்.. ரிஸ்க் எடுக்க நினைச்ச காரணம் இதுதான் – ரோகித் சர்மா பேட்டி

0
1299
Rohit

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெற்று இருக்கிறது. முதல் மூன்று நாட்களில் வெறும் 34 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளில் மீதி ஒரு செஷன் முழுமையாக இருக்கும் பொழுது இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

- Advertisement -

எதிர்பார்க்காத அணுகுமுறையை காட்டிய இந்தியா

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் எடுக்க, இந்திய அணி இன்று காலை முழுவதுமாக விளையாடி பங்களாதேஷ் அணியை அடுத்து பேட்டிங் செய்ய வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கண்களை விட நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவது என இந்திய அணி அதிரடியாக விளையாடி டிக்ளர் செய்து நேற்றே பங்களாதேஷ் அணியை விளையாட வைத்தது. இதுவே வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது ” நாங்கள் தொடர்ந்து செல்கிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணியாளர்களுடன் வேலை செய்ய வேண்டி இருந்தது. முதலில் நாங்கள் ராகுல் பாய்வுடன் வேலை செய்தோம்.அவருடன் எனக்கு ஒரு அற்புதமான நேரம் இருந்தது. ஆனால் வாழ்க்கை நகர்கிறது. இப்போது கம்பீர் வந்திருக்கிறார். அவர் எப்படிப்பட்ட அணுகுமுறையுடன் வருகிறார் என்று தெரியும். இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது”

- Advertisement -

தெரிந்தே ரிஸ்க் எடுத்தேன்

மேலும் பேசிய ரோகித் சர்மா கூறும்பொழுது ” நாங்கள் போட்டியில் 2 1/2 நாட்களை இழந்து நான்காவது நாள் திரும்பி வந்தோம். எனவே நாங்கள் அவர்களை விரைவாக ஆல் அவுட் செய்து பேட்டிங்கில் என்ன செய்ய முடியும்? என்று பார்க்க விரும்பினோம். அவர்கள் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனார்கள். ஆனால் அவர்கள் விளையாடிய அளவுக்கான ஆடுகளம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அப்படிப்பட்ட நிலையில் அதிரடியாக விளையாடினால் 100 முதல் 150 ரண்களில் ஆல் அவுட் ஆகும் நிலைமையும் இருந்தது. ஆனால் நான் வெற்றிக்காக ரிஸ்க் எடுத்தேன்”

இதையும் படிங்க : 17 ஓவர்.. 18வது சீரிஸ் வெற்றி.. பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்தியா.. உள்நாட்டில் தொடரும் ஆதிக்கம்

“ஆகாஷ் தீப் சிறப்பாக இருக்கிறார். அவர் நிறைய உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் இருந்து வரும் பொழுது அவருக்கு சிறப்பான பயிற்சியும் தரமும் இருக்கிறது. அவருக்கு நல்ல பிட்னஸ் இருக்கின்ற காரணத்தினால் அவரால் நீண்ட ஓவர்கள் பந்து வீச முடியும். எப்பொழுதும் பென்ச் வலிமையை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -