17 ஓவர்.. 18வது சீரிஸ் வெற்றி.. பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்தியா.. உள்நாட்டில் தொடரும் ஆதிக்கம்

0
272
Bumrah

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்த தொடரில் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வெல்ல பங்களாதேஷ அணி முதல் நாளில் 34 ஓவர் மட்டும் விளையாடி மூன்று விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் மழையால் ரத்தானது.

- Advertisement -

நான்காவது நாள் மேஜிக்

இந்த நிலையில் நான்காவது நாளில் மீண்டும் போட்டி துவங்கியது. தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி நான்காவது நாளில் 233 ரன்கள் மொத்தமாக எடுத்து ஆல் அவுட் ஆனது.அந்த அணிக்கு மொமினுல் ஹக் 107 ரன்கள் ஆட்டமெலக்காமல் எடுத்து காப்பாற்றினார். இந்திய தரப்பில் பும்ரா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போல விளையாட ஆரம்பித்தது. மொத்தம் 34.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 285 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் இழந்திருந்த போதே டிக்ளர் செய்தது. இந்திய அணிக்கு ஜெய் ஸ்வால் 52 பந்தில் 71, கேஎல்.ராகுல் 43 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் தரப்பில் மெகதி ஹசன் மிராஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ஐந்தாவது நாளில் அடங்கிய பங்களாதேஷ்

இதைத்தொடர்ந்து நேற்று நான்காவது நாளில் 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து இருந்த பங்களாதேஷ் அணி, இன்று ஐந்தாவது நாளில் தொடர்ந்து விளையாடி 146 ரன்களில் சுருண்டது. பங்களாதேஷ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷத்மன் இஸ்லாம் 50 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா மற்றும் ஜடேஜா மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து 95 ரன்கள் என்கின்ற எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 8, சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய் ஸ்வால் 45 பந்தில் 51 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் ஆட்டம் இழந்தார். மேலும் விராட் கோலி 29, ரிஷப் பண்ட் 4 ரன்கள் எடுக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க : கோலியை விட.. என்னோட 24 வயசு வீரர் ரெக்கார்ட் பெரிசு.. அவர் வேணும் – பாகிஸ்தான் கேப்டன் பேச்சு

இந்திய அணிக்கு உள்நாட்டில் இது தொடர்ந்து 18 ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி ஆகும். நடப்பு டெஸ்ட் போட்டியில் 235 ஓவர்கள் மழையால் வீச முடியாமல் இருந்தும் இந்திய அணி அணி பெற்ற இந்த வெற்றி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

- Advertisement -