எல்லாரையும் கூட்டி இதைத்தான் சொன்னேன்.. இவரை பத்தி பேச மாட்டேன் ஏன்னா அவர் மேதை – ரோகித் சர்மா பேச்சு

0
22495
Rohit

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா போட்டி குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. பத்து ஓவர்களுக்கு 80 ரன்கள் தாண்டி மூன்று விக்கெட் மட்டுமே இழந்த இந்திய அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை மோசமாக இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்பொழுது 15 ஓவர்கள் வரையில் வெற்றி வாய்ப்பில் இருந்தது. பிறகு பந்துவீச்சில் இந்திய பவுலர்கள் அனைவருமே கடைசி ஐந்து ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன் மட்டுமே எடுத்தது. பும்ரா 14 ரன் மட்டுமே தந்து மூன்று விக்கெட்டை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா “நாங்கள் போதுமான அளவு பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது முதல் 10 ஓவர்களில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அதற்கு மேல் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்காததால் வீழ்ந்தோம். இப்படிப்பட்ட ஆடுகளத்தில் ஒவ்வொரு ரன்னும் எவ்வளவு முக்கியம் என்று நாங்கள் பேசினோம். கடந்த ஆட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது இங்கு இந்த முறை நல்ல ஆடுகளமாகவே இருந்தது.

இப்படிப்பட்ட அருமையான பவுலிங் யூனிட் உடன் வேலை செய்யும் பொழுது நம்பிக்கையாக உணர்கிறீர்கள். பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்பொழுது, நான் அனைவரையும் கூப்பிட்டு, அவர்களால் நம்மை இவ்வளவு ரன்களுக்குள் மடக்க முடியும் என்றால், நம்மாலும் அப்படி செய்ய முடியும் என்று கூறினேன். அனைவரின் சிறிய பங்களிப்பும் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியன் வெளியே வந்ததுமே முடிவு பண்ணிட்டேன்.. பாகிஸ்தானுக்கு என்னோட பிளான் இதுதான் – ஹீரோ பும்ரா பேட்டி

பும்ரா வலிமையிலிருந்து மேலும் வலிமைக்கு செல்கிறார். அவர் ஒரு மேதை. அவர் குறித்து நான் அதிகம் பேசப்போவது கிடையாது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர் இதே மனநிலையில் இருக்க வேண்டும். ரசிகர்கள்கூட்டம் மிக அருமையாக இருந்தது. அவர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் செல்வார்கள் என்று நினைக்கிறேன். மேலும் இது ஆரம்பம்தான் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.