சூரியன் வெளியே வந்ததுமே முடிவு பண்ணிட்டேன்.. பாகிஸ்தானுக்கு என்னோட பிளான் இதுதான் – ஹீரோ பும்ரா பேட்டி

0
11007
Jasprit

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் இந்திய அணி ஆறு ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்து ஆட்டநாயகன் விருது பெற்ற ஜஸ்பரித் பும்ரா போட்டிக் குறித்து பேசி இருக்கிறார்.

பாகிஸ்தான அணி நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சூழ்நிலை பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆனாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல விதமாக விளையாடி சிறப்பாக ரன்கள் கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் 89 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி மேற்கொண்டு 30 ரன்கள் மட்டுமே சேர்த்து 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரும் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மட்டுமே போராடி 44 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி ஆறு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்து வீச்சு தரப்பில் பும்ரா நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே தந்து மூன்று முக்கிய விக்கெட்டை வீழ்த்தி, வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய பும்ரா கூறும் பொழுது “இந்த வெற்றி மிகவும் நன்றாக இருக்கிறது. ஆரம்பத்திலேயே போட்டி சமநிலையில் இருப்பதாகத்தான் உணர்ந்தேன். சூரியன் வெளியே வந்த பிறகு விக்கெட் நன்றாக மாறியது. இதன் காரணமாக பந்துவீச்சு ஒழுக்கமாக இருக்க முடிவு செய்தோம். என்னால் முடிந்தவரை சீமில் வீசவும், இறுதிக்கட்ட ஓவர்களில் தெளிவாக இருக்கவும் முயற்சி செய்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : வெறும் 119 ரன்.. மேஜிக் காட்டிய இந்திய பவுலர்கள்.. கண்ணீர் விட்ட பாக் வீரர்.. இந்தியா அசத்தல் வெற்றி

இது எல்லாமே நன்றாக அமைந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்தியாவில் விளையாடியது போல உணர்ந்தேன். ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு களத்தில் எங்களுக்கு ஆற்றலை கொடுக்கிறது. நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். மேலும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். எப்பொழுதும் செயல் முறையில் ஒட்டிக்கொண்டு விளையாடுவதை விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.