வீடியோ.. எல்கரின் மிகப்பெரிய வீக்னஸ்.. பொன்னான வாய்ப்பை தவறவிட்ட இந்திய பவுலர்ஸ்.. அடுத்த போட்டியிலாவது இது நடக்குமா.?

0
393

சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி, டிசம்பர் 26 ஆம் தேதி, செஞ்சுரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற சவுத் ஆப்பிரிக்கா, பந்துவீச்சை தேர்வு செய்தது. மற்ற வீரர்கள் ஏமாற்றிய நிலையில், சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுலின் சதத்தின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்கள் ஆட்டம் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ரபாடா, ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதை அடுத்து முதல் இன்னிங்ஸ் தொடங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணி, தொடக்க ஆட்டக்காரரான டீன் எல்கர்
185 ரன்கள், டேவிட் பெடிங்காம் 56 ரன்கள், மார்கோ ஜான்சன் ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் சேர்த்தனர், இதனால் சவுத் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் 408 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

- Advertisement -

163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் சவுத் ஆப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி மட்டும், சவுத் ஆப்பிரிக்காவின் வேகபந்துவீச்சை சமாளித்து 76 ரன்களை எடுத்தார். சவுத் ஆப்பிரிக்கா அணியில், நந்த்ரே பர்கர் 4 விக்கெட், மார்கோ ஜான்சன் 3 விக்கெட், ககிசோ ரபாடா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்திய அணி டீன் எல்கருக்கு எதிராக, சரியாக திட்டங்களை செயல்படுத்தவில்லை என நமன் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் “இன்றைய காலகட்டத்தில் அவர் விளையாடிய கடைசி ஐந்து போட்டிகளில் எவ்வாறு ஆட்டம் இழந்தார் என்பதை பரிசளித்து திட்டங்களை உருவாக்கி இருக்க வேண்டும். யாருக்கு எங்கு பந்து வீச வேண்டும், என திட்டங்களை வகுத்து விளையாடி இருக்க வேண்டும்” என்று இந்தியாவின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்தார்.

சென்ற சவுத் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போதும், டீன் எல்கர் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். அவரின் சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி தொடரை இழந்தது. இந்திய அணி டீன் எல்கருக்கு எதிரான சரியான திட்டங்களை செயல்படுத்தவில்லை என விமர்சனங்கள் இருந்த நிலையில், இந்த சுற்றுப்பயணத்திலும், அதே தவறையே இந்திய அணி செய்துள்ள என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

- Advertisement -

டீன் எல்கர் 2022/23 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், 6 இன்னிங்ஸ்களில், 4 முறை ஷார்ட் பிட்ச் பந்தில், ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்தார். அந்தத் தொடரில் 56 ரன்களை மட்டுமே எடுத்தார். அப்போது பேசிய டீன் எல்கர், “தொடர்ந்து இதே போல் ஆட்டம் இழப்பது வேதனை அளிக்கிறது, ஒன்று அல்லது இரண்டு முறை என்றால் பரவாயில்லை, ஆனால் தொடர்ந்து இதே முறையில் ஆட்டம் இழப்பது வேதனையுடன் எரிச்சலையும் தருவதாக இருக்கிறது” என தெரிவித்து இருந்தார்.

ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு, டீன் எல்கர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், அந்தத் தொடரிலும் ஷார்ட் பிட்ச் பந்தில் இரண்டு முறை ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பந்தில் ஆட்டம் இழக்கும் டீன் எல்கர் எதிரான திட்டம் என்பது எளிதானது, ஆனால் அதை இந்திய அணி செய்ய தவறிவிட்டது எனவும், வர்ணனை செய்யும்போது சஞ்சய் பாங்கர் தெரிவித்தார்.

மேலும் புதிய பந்தில், பும்ராவும், மற்றும் முகமது சிராஜும் அவரை ஸ்லிப் திசையில் ஆட வைத்து ஆட்டம் இழக்க முயற்சித்தனர். இதனால் அவர் ஸ்கொயர் திசையில் ரன்களை எளிதில் சேகரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு எதிரான ஷார்ட் பிட்ச் 15ஆம் ஓவரில், முதல் முறையாக வீசப்பட்டது. அந்த பந்து அவர் தடுமாறியது தெளிவாக இருந்த போதும், இந்திய அணி ஷார்ட் பிட்ச் பந்தை அவருக்கு எதிராக சரியாக பயன்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில், முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், ஜனவரி 3ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வரும் டீன் எல்கருக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவர் எளிதில் ஆட்டம் இழக்க கூடிய ஷார்ட் பிட்ச் பந்துவீச்சு முறையை சரியாக பயன்படுத்தி தொடரை சமம் செய்ய வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்.