இந்திய அணி இன்று டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன்கள் எடுக்காமல் இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் விராட் கோலி ரன்கள் எடுக்காமல் இருப்பது குறித்தும், இந்திய அணியின் பேட்டிங் ஆழம் குறித்தும், மேலும் ஸ்பின்னர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் குறித்தும் விரிவாக பேட்டியளித்திருக்கிறார்.
விக்ரம் ரத்தோர் விராட் கோலி குறித்து பேசும் பொழுது ” விராட் கோலி ரன்கள் எடுக்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. அவர் ரன்கள் எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதே சமயத்தில் உங்களுக்கே தெரியும் இந்திய அணியில் நல்ல பேட்டிங் இருக்கிறது. எனவே அவர்கள் ரன்களை கொண்டு வருகிறார்கள். கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் இருந்து ரன் வந்தது.
நாங்கள் எப்பொழுதும் ஒரு அணியாக நல்ல டெப்த் உடன் இருக்கிறோம். மேலும் எங்களுக்கு இந்த கண்டிஷன் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இங்கு இரண்டு அல்லது மூன்று ஸ்பின்னர்கள் உடன் விளையாட முடியும். இதுதான் எங்களுடைய பலம். எனவே எங்களால் சிறந்த அணியாக இருக்க முடியும்.
அக்சர் படேல் போன்ற ஒருவர் எட்டாவது இடத்தில் வருவது அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கிறது. அவரால் நல்ல முறையில் பேட்டிங் செய்ய முடியும். மேலும் அவர் தற்போது சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார். எனவே இது நிறைய ஆப்ஷன்களை அணிக்கு கொடுக்கிறது.
இதையும் படிங்க : தெ.ஆ-வை துரத்தும் உலககோப்பை துரதிஷ்டம்.. ஒரே போட்டியில் விதியை மாற்றிய வெ.இ.. குரூப் 2 நிலைமை என்ன?
நாங்கள் ஏற்கனவே நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்கா நியூயார்க்கில் மோசமான சூழ்நிலையில் விளையாடினோம். ஆனால் இங்கு வெஸ்ட் இண்டீஸில் பேட்டிங் செய்வதற்கு நல்ல சூழ்நிலை இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.