தெ.ஆ-வை துரத்தும் உலககோப்பை துரதிஷ்டம்.. ஒரே போட்டியில் விதியை மாற்றிய வெ.இ.. குரூப் 2 நிலைமை என்ன?

0
382
T20iwc2024

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணியை வென்று, தொடரில் இருந்து வெளியேறும் ஆபத்தில் இருந்து தற்போதைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தப்பித்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் இருந்தார். ஆட்டநாயகன் விருது வென்ற அவர் போட்டி குறித்து பேசி இருக்கிறார்

இன்று வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பதிவு செய்தது. நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி சுலபமாக அமையவில்லை. சொந்த மக்கள் முன்னால் வெஸ்ட் இண்டீஸ் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் ரோஸ்டன் சேஸை பந்துவீச்சில் கடைசியாகக் கொண்டு வந்தார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் 19 ரன்கள் மட்டும் விட்டு தந்து, கோரி ஆண்டர்சன், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஹர்மீத் சிங் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அமெரிக்கா அணி 128 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.

இதற்கு அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாய் ஹோப் 39 பந்தில் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 10.5 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் நல்ல ரன் ரேட்டை பெற்ற அந்த அணி அரையிறுதி வாய்ப்பில் பிரகாசமாக நீடிக்கிறது.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது வென்ற ரோஸ்டன் சேஸ் பேசும்பொழுது “இது என்னுடைய சிறந்த செயல்பாடாக அமைந்தது. என் நண்பர்கள் மற்றும் என் குடும்பத்தினர் என அனைவரும் பார்க்கும்படி என்னுடைய சொந்த மைதானத்தில் இதை செய்வது மிகவும் மகிழ்ச்சி ஆனது. அமெரிக்க அணி பவர் பிளேவில் சிறப்பாக விளையாடினால் மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்களாக நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என எங்களுக்கு கூறப்பட்டது.

இதையும் படிங்க : மேட்ச்க்கு முன்னாடியே பிரச்சனை.. ஆனாலும் குடும்பத்து முன்னால அந்த சம்பவத்தை பண்ணிட்டேன் – ரோஸ்டன் சேஸ் பேச்சு

இன்று எனக்கு சிறந்த நாளாக துவங்கவில்லை. நான் கடைசி நேரத்தில் பேருந்தை தவற விட இருந்தேன்.ஆனால் கென்னிங்டன் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் சிறந்த மைதானம். இங்கு அருமையான சூழ்நிலை இருக்கும். ரசிகர்கள் எப்பொழுதும் சுற்றி இருப்பார்கள். நாங்கள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு முன்பாக இருக்கும் எல்லா அணிகளையும் வெல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -