ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் விளையாடுவாரா? என்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பதில் அளித்திருக்கிறார்.
இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் முதல் டெஸ்டுக்கு முன்பாக கை கட்டை விரலில் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என்பது போல செய்திகள் பரவி வந்தன. இதற்கு இந்திய பேட்டிங் கோச் அபிஷேக் நாயர் பதில் அளித்திருக்கிறார்.
சுப்மன் கில் காயமும் தற்போதைய நிலையும்
சுப்மன் கில் பயிற்சியின்போது கை கட்டை விரலில் காயம் அடைய ஸ்கேன் செய்து பார்க்கப்பட்ட பொழுது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. எனவே அவர் அதற்கு பிறகு பயிற்சியில் ஈடுபடவில்லை. முதல் டெஸ்ட் துவங்குவதற்கு முந்தைய நாளில் அவர் பயிற்சிக்கு வந்தார். ஆனாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத இந்திய அணி நிர்வாகம் அவரை முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கவில்லை.
இந்த நிலையில் மீண்டும் அவர் தற்பொழுது பயிற்சிக்கு வந்திருக்கிறார். அடிலெய்ட் மைதானத்தில் நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் ஆக நடைபெறுகிறது. இதற்கு பயிற்சி பெறும் விதமாக இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பகல் இரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. தற்போது இதில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
அபிஷேக் நாயர் அளித்த பதில்
இதுகுறித்து அபிஷேக் நாயர் கூறும் பொழுது “கில் இப்பொழுது பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய காயம் குறித்து எங்களுடைய பிசியோதான் மதிப்பீடு செய்ய முடியும். அவரது நிலை என்னவென்று எனக்குத் தெரியாது.ஆனால் பேட்டிங் செய்யும் பொழுது மிகவும் வசதியாக இருந்தார்”
இதையும் படிங்க : பிசிசிஐ ஐபிஎல்-ல் இந்த மாற்றத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்.. வேற மாதிரி இருக்கும் – ஏபி டிவில்லியர்ஸ் வலியுறுத்தல்
“அவர் தற்போது இன்டோரில் பயிற்சி செய்து வருகிறார். அவர் குறித்து பிசியோ மதிப்பீடு செய்த பிறகு, அவர் நாளைய போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்? என்று கூறியிருக்கிறார். தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் கில் திரும்பி வருவது இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முன்னேறி செல்வதற்கு முக்கியமானதாக அமையும்!