இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரின் மத்தியில் ஒரு அணி தேவைப்படும் வீரரை வாங்கும் விதமாக விதியை மாற்றி அமைக்க வேண்டும் என ஏபி.டிவில்லியர்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த முறை ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அதே சமயத்தில் மேட்ச் வின்னிங் ஸ்பின்னர் இல்லாமல் ஆர்சிபி அணி இருப்பதாகவும் ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலி கேப்டனாக வருவார்
இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது ” தற்போது ஆர் சி பி அணி விராட் கோலியை கேப்டனாக கொண்டுவரும் என்று நான் நினைக்கிறேன். தற்போது இது உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அணியை வைத்து பார்க்கும் பொழுது விராட் கோலி கேப்டனாக வருவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது”
“ஹேசில்வுட் உடன் புவனேஸ்வர் குமார் பந்து வீசுவதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். நாங்கள் ரபடாவை வாங்குவதற்கு மிக அருகில் இருந்தும் ஆனால் எங்களால் வாங்க முடியவில்லை. ஆனால் எங்களுக்கு லுங்கி நிகிடி கிடைத்திருக்கிறார். அவரிடம் நல்ல ஸ்லோயர் பந்து இருக்கிறது. அவர் நல்ல பிட்னஸ் உடன் இருந்தால் அவர் கணக்கிட முடியாத ஒரு சக்தி”
பிசிசிஐ இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்
“தற்பொழுது எங்களுக்கு ஒரு சமநிலையான அணி கிடைத்திருக்கிறது. இருந்தாலும் கூட நாங்கள் ஒரு மேட்ச் வின்னிங் பின்னரை இழந்திருக்கிறோம். ஆனால் சின்னசாமி மைதானத்தை கோட்டையாக மாற்றும் வகையிலான ஒரு அணியை பெற்று இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த அணி சின்னசாமி மைதானத்தில் வேலை செய்யும்”
இதையும் படிங்க : விராட் கோலிய இப்படி சிறப்பா பார்க்க நாங்க விரும்பல.. கம்மின்ஸ் இந்த தப்பு செஞ்சார் – ஆலன் பார்டர் விமர்சனம்
“ஐபிஎல் குழு மற்றும் பிசிசிஐ ஒரு டிரேடிங் முறையை ஐபிஎல் தொடர் நடைபெறும் பொழுதே கொண்டுவர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதாவது விற்கப்படாத வீரர்களில் ஒரு வீரர் ஒரு அணிக்கு தேவைப்பட்டால், ஐபிஎல் நடந்து கொண்டிருக்கும் பொழுது மத்தியில் அந்த அணி வாங்கிக் கொள்ளும்படி விதிகளில் மாற்றம் வர வேண்டும். இது பலன் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.