நான் ரோகித் கம்பீர்.. ஆஸிக்கு இந்த பிளானை ரெடி பண்ணி இருக்கோம்.. செம்ம ரிசல்ட் வந்திருக்கு – அபிஷேக் நாயர் பேச்சு

0
182
Abhishek

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் எந்த பயிற்சி போட்டியில் விளையாடாதது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் சர்மா விளக்கம் அளித்திருக்கிறார்.

தற்போது பெர்த் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியினர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய அணிகளுடன் எந்த வித பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. இது குறித்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் பயிற்சி முறை

தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியினர் வழக்கமான தனிப்பட்ட வலை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். மேலும் பெர்த் மைதானத்தின் நடு ஆடுகளத்தில் விளையாடி விசுவலேசன் பயிற்சி பெறுகிறார்கள். இத்தோடு இந்திய ஏ அணிக்கு எதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடவும் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துவிட்டது. கடந்த முறை டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியும் இந்திய கிரிக்கெட் வாரிய அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாட மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தனிப்பட்ட வலைப்பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார்கள்.

- Advertisement -

இதுதான் முக்கிய காரணம்

இதுகுறித்து அபிஷேக் சர்மா கூறும் பொழுது ” இந்திய அணி ஆஸ்திரேலிய புறப்படுவதற்கு முன்பாக எங்களுக்கு மூன்று நாட்கள் இருந்தது. அப்பொழுது நான் கம்பீர் பையா மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மூவரும் ஒரு திட்டத்தை உருவாக்கினோம். அது என்னவென்றால் வீரர்கள் அதிக நேரம் பயிற்சியில் இருப்பதற்கும், அவர்கள் நிலைமைக்கு தகுந்தபடி மாற்றி அமைத்துக் கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம்”

“இதன் காரணமாக நாங்கள் பயிற்சி போட்டியை மறுத்து விட்டோம். இதற்கு பதிலாக நாங்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்றோம். அப்போது எங்கள் வீரர்கள் முதல் முறை சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த போது அவர்கள் நிலைமைக்கு தகுந்தவாறு மாறிக்கொண்டு நன்றாக விளையாடினார்கள். இதுவே பயிற்சி போட்டியாக இருந்தால் பேட்டிங் செய்ய ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கும்”

இதையும் படிங்க : கோலியை கேப்டன் ஆக்கிடலாமா?.. இப்படி இஷ்டத்துக்கு பேச முடியாது – ஹர்பஜன் கவாஸ்கருக்கு மறைமுக பதிலடி

“மேலும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் நீண்ட ஸ்பெல் வீசுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. பும்ரா ஒரு நாளில் 18 ஓவர்கள் பங்கு வீசினார். அவர்கள் தங்களுடைய விருப்பப்படி பந்துவீசி பயிற்சி பெறுவதற்கு இப்படியான பயிற்சி முறைதான் வசதியாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -