இந்திய அணி வீரர் ஹர்பஜன்சிங் வேகமாக அணியை மாற்றுவதை செய்ய முடியாது என்று சுனில் கவாஸ்கருக்கு மறைமுகமான பதிலடி கொடுத்து பேசியிருக்கிறார். அதே சமயத்தில் இது கவாஸ்கரை நோக்கிய விமர்சனம் அல்ல என்றும் கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியாமல் இருக்கிறார். இதனால் பும்ரா முதல் டெஸ்ட் போட்டியில்கேப்டனாக இந்திய அணிக்கு தலைமை தாங்க இருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனம்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள காரணத்தினால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கவாஸ்கர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றும் ரோஹித் சர்மாவை வற்புறுத்தி இருந்தார். இதற்கு ஆரோன் பின்ச் குடும்பம்தான் முதலில் முக்கியம் என கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து பும்ரா தொடர் முழுக்க கேப்டனாக செயல்பட வேண்டும் ரோஹித் சர்மா வீரராகவே இருக்க வேண்டும் என அடுத்த விமர்சனத்தை கவாஸ்கர் முன் வைத்தார். இதைத் தொடர்ந்து தற்பொழுது இதற்கு ஹர்பஜன் சிங் கவாஸ்கருக்கு பதிலடி தந்திருக்கிறார். இருந்தபோதிலும் இது கவாஸ்கர் பேசிய பேச்சுக்கான பதில் கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அடுத்து விராட் கோலியை கேப்டன் ஆக்கலாமா?
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றால் அடுத்து பும்ராவே கேப்டனாக இருக்க வேண்டும் என்றும், அதுவே தோல்வி அடைந்தால் ரோஹித் சர்மா கேப்டன் ஆக வர வேண்டும் என்றும் மக்கள் விரும்புவார்கள். மக்கள் மிக வேகமாக அணியை மாற்றி அமைத்துக் கொண்டு இருப்பார்கள்”
இதையும் படிங்க : ஆஸியில் இந்திய அணியின் முதல் பிளானே மோசம்.. நல்ல வாய்ப்பை விட்டுட்டிங்க – மைக்கேல் வாகன் விமர்சனம்
“நான் சுனில் கவாஸ்கர் சார் பேசியது பற்றி கூறவில்லை. மக்கள் எப்படி பேசுகிறார்கள்? அவர்கள் எப்படி நினைப்பார்கள்? என்பதை பற்றி நான் பேசுகிறேன். அணி வெற்றி பெறும் போதும் தோல்வி அடையும் பொழுதும் மக்கள் உடனுக்குடன் அணியை மாற்றுவது பற்றி யோசிப்பார்கள். இப்பொழுது பும்ரா மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தால் உடனே அவர்கள் விராட் கோலியை கேப்டன் ஆக்க வேண்டும் என்பார்கள். எனவே இதுவெல்லாம் அவசியமற்ற பேச்சு” என்று கூறியிருக்கிறார்.






