இந்திய கிரிக்கெட்

59 ரன்ஸ்.. 4 நாளில் டி20 சாம்பியன் நியூஸி தோல்வி.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி.. முதல் ODI கிரிக்கெட்

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் சூழ்நிலையில் முதல் ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது.

- Advertisement -

இதில் தற்போது நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய வீராங்கனைகள் சிறப்பான பேட்டிங்

சமீபத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேற இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் அகமதாபாத்தில் இன்று முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மந்தனா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக செபாலி வர்மா மற்றும் மந்தனா ஆகியோர் களமிறங்கிய நிலையில் கேப்டன் மந்தனா 5 ரன்களில் வெளியேறினார்.

அதற்குப் பிறகு செபாலி வர்மா 33 ரன்கள் குவித்து வெளியேற பாட்டியா 37 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு மிடில் வரிசையில் ரோட்ரிகஸ் 35 ரன்கள் ஹசாப்னஸ் 42 ரன்கள் தீப்தி ஷர்மா 41 ரன்கள் குவிக்க முடிவில் இந்திய அணி 44.3 ஓவர்களில் 227 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் அமிலியா கெர் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

- Advertisement -

ராதா யாதவ் சிறப்பான பந்து வீச்சு

நியூசிலாந்து அணியில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ப்ரூக் ஹல்லிடே 39 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்ததாக எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய கெர் பேட்டிங்கில் 25 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:ரோகித் செஞ்ச அந்த ஒரே சேஞ்ச்.. வாஷிங்டன் சுந்தர் சாதிக்க அதுதான் காரணம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இதில் இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 8.4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்னர்தான் நியூசிலாந்து அணி டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குள் தற்போது முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இரண்டாவது போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்

- Advertisement -
Published by

Recent Posts