ரோகித் செஞ்ச அந்த ஒரே சேஞ்ச்.. வாஷிங்டன் சுந்தர் சாதிக்க அதுதான் காரணம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
465
Aakash

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 59 ரன்கள் தந்து வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியை போட்டியில் முன்னிலையில் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு திடீரென தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவருக்கு உடனே வாய்ப்பு கொடுக்கப்பட்டதும், ஆனால் அவருடைய பந்துவீச்சின் ஆரம்பத்தில் அவர் தடுமாறியது குறித்தும் ஆகாஷ் சோப்ரா விரிவாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

அவ்வளவு சுவாரசியமாக உற்சாகமாக இருக்கிறது

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து இடையில் நீக்கப்பட்ட பிறகு வந்து இப்படி செய்திருப்பது, இதை பார்ப்பதற்கு எனக்கு மிகுந்த உற்சாகமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. ஆனால் அவர் இடையில் இல்லாமல் போனதற்கு ஏதாவது காரணங்கள் இருந்திருக்கும்”

“வேறு நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இறந்த பொழுது இவரை கொண்டு வந்து விளையாடி இருக்கிறீர்கள். வாஷிங்டன் சுந்தர் உடைய பந்துவீச்சு தொடக்கமும் சரியாக இல்லை. உங்கள் தேர்வில் சில கேள்விகள் இருந்தன. இருந்த போதும் வாஷிங்டன் சுந்தர் இறுதியில் செய்த விதத்தால் எல்லாமே இங்கு மாறிவிட்டது”

- Advertisement -

ரோகித் செய்த அந்த மாற்றம்

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா “ஆரம்பத்தில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீசுவதை பார்த்த பொழுது அவர் அவ்வளவு சீராக இல்லை. அவர் தொடர்ந்து ஒரே இடத்தில் பந்து வீசவுமில்லை. அவர் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாததால் கொஞ்சம் அவருக்கு நேரம் தேவை. மேலும் நீண்ட நாட்கள் கழித்து வருவதால் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகள் தொந்தரவு செய்யும்”

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. அஸ்வின் வாஷிங்டன் சுந்தர் படைத்த முதல் சாதனை.. புனே டெஸ்ட்

“பின்னர் அவருக்கு கொஞ்சம் நடுவில் நேரம் கிடைத்தது. பிறகு அங்கிருந்து விஷயங்கள் மாறின. ரோகித் சர்மா அவர் பந்து வீசிய பக்கத்தை மாற்றி இன்னொரு பக்கத்தில் பந்து வீச கொடுத்தார். அங்கிருந்து மொத்தமாக அப்படியே பதினொரு விக்கெட்டுகளும் கொத்தாக விழுந்தன. மேலும் அவர் பேட்டர்கள் விளையாடக்கூடிய இடத்தில் அரிதாகவே வீசினார்.ஒரு சுழல் பந்துவீச்சாளராக பேட்ஸ்மேன்களை முன் காலில் விளையாட வைத்தால் நீங்கள் சிறப்பானவர். அதை அவர் செய்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -