தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது.
தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 159 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சில் பும்ரா ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணி திணறல்
நேற்று இந்திய அணி முதல் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்து 37 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் 29, கேஎல் ராகுல் 39, ரிஷப் பண்ட் 27, ரவீந்திர ஜடேஜா 27, துருவ் ஜுரல் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதற்கு நடுவில் கேப்டன் சுப்மன் கில் ஒரு பவுண்டரியுடன் நான்கு ரன்கள் எடுத்த பொழுது அவருக்கு கழுத்தில் பிடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து களத்தில் இருந்து அவர் வெளியேறினார். ஆனால் இறுதி வரையில் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய திரும்பி வரவில்லை.
இந்திய கேப்டன் பயந்தது நடந்தது
இதற்கு அடுத்து கடைசி விக்கெட்டாக அக்சர் படேல் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 62.2 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. கில் விளையாட வராததால் ஆல் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சைமன் ஹார்மர் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 30ன் முன்னிலை பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க : வெறும் 88 டெஸ்ட்.. கபில்தேவ் இயான் போத்தம் வரிசையில் ஜடேஜா.. டெஸ்டில் வரலாற்று சாதனை.. தெஆ முதல் டெஸ்ட்
இந்த போட்டிக்கு முன்பாக ஆடுகளத்தை பார்வையிட்ட இந்திய கேப்டன் சுப்மன் கில், ஆடுகளத்திற்கு தண்ணீர் விடாமல் வறண்டு இருந்த காரணத்தினால் சுழல் பந்துவீச்சுக்கு அதிக சாதகம் இருக்கும் என அதிருப்தி அடைந்தார். ஆடுகளத் தயாரிப்பாளருடன் பேசினார். கடைசியில் அவர் பயந்தது போலவே ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கிறது.






