வெறும் 88 டெஸ்ட்.. கபில்தேவ் இயான் போத்தம் வரிசையில் ஜடேஜா.. டெஸ்டில் வரலாற்று சாதனை.. தெஆ முதல் டெஸ்ட்

0
34
Kapil

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட் கைப்பற்றினார். நேற்று முதல் நாள் முடிவில் இந்திய அணி 37 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்தியாவுக்கு விக்கெட் சரிவு

இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளில் விளையாட ஆரம்பித்த இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் 29 ரன்கள், கேஎல்.ராகுல் 39 ரன்கள், ரிஷப் பண்ட் 27 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார்கள். இதனால் இந்திய அணிக்கு தற்போது கொஞ்சம் நெருக்கடியான நிலை உருவாகி இருக்கிறது.

இதற்கிடையில் இந்திய கேப்டன் சுப்பன் வில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக உடனடியாக களத்தில் இருந்து வெளியேறி விட்டார். தற்போது களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இருக்கிறார்கள். தற்போது இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 21 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.

- Advertisement -

ஜடேஜா வரலாற்று சாதனை

இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா 10 ரன்கள் எடுத்த பொழுது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 300+ விக்கெட்டுகள் எடுத்த நான்காவது வீரராக வரலாற்று சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் ஒரு சேர சேர்த்து இந்த மைல்கல்லை எட்டுவது மிகவும் கடினமான விஷயம். இந்தப் பட்டியலில் கபில் தேவ் உடன் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இந்திய வீரராக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 95 இன்னிங்ஸ் குறைவு.. சேவாக்கின் பெருமை சாதனை காலி.. சாதாரணமாக உடைத்த ரிஷப் பண்ட் – தெஆ முதல் டெஸ்ட்

கபில் தேவ் – 131 போட்டிகள் – 5248 ரன்கள் – 434 விக்கெட்டுகள்
சர் இயான் போத்தம் – 102 – 5200 – 383
டேனியல் வெட்டோரி – 113 – 4531 – 362
ரவீந்திர ஜடேஜா – 88 – 4000 – 338

- Advertisement -