இன்று ஜிம்பாப்வே இந்தியா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டி20 போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் ரவி பிஸ்னாய் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்ல நடுவர் மன்னிப்பு கேட்டு உடனே முடிவை மாற்றிக் கொண்ட சம்பவம் நடைபெற்று இருக்கிறது.இன்று ஜிம்பாப்வே இந்தியா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டி20 போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் ரவி பிஸ்னாய் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்ல நடுவர் மன்னிப்பு கேட்டு உடனே முடிவை மாற்றிக் கொண்ட சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 46 பந்துகளில் அபிஷேக் சர்மா அதிரடியாக சதம் அடித்தார். ருதுராஜ் 47 பந்துகளில் 77* ரன்கள், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாவே அணிக்கு முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியில் ஒரு பந்துவீச்சாளர் குறைவாக இருந்த போதிலும் கூட ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களால் அதை பயன்படுத்தி ரன்கள் எடுக்க முடியவில்லை.
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா உட்பட எல்லோரும் வருவதும் போவதுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ஜிம்பாபே அணியின் இடது கை பேட்ஸ்மேன் கேம்ப்பெல் அணியின் ரன் வேகத்தை அதிகரிப்பதற்காக நிறைய வித்தியாசமான ஷாட்களை முயற்சி செய்து போராடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இடது கை பேட்ஸ்மேன் ஆன அவருக்கு ரவி பிஸ்னாய் லெக் சைடு பந்தை வீச அதை அவசரப்பட்டு திரும்பி ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க கேம்ப்பெல் முயற்சி செய்தார். இதற்கு உடனே நடுவர் வைடு கொடுத்தார். பேட்ஸ்மேன் ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ஸ்விட்ச் ஹிட் அடிக்க திரும்பினால் பந்து எந்த நிலையில் இருந்தாலும் வைடு தரப்படாது.
இதையும் படிங்க : 15 பந்து எதுவுமே பண்ண முடியல.. நானும் அபிஷேக் ஷர்மாவும் இதைத்தான் பிளான் பண்ணினோம் – ருதுராஜ் பேட்டி
இதை மிகச் சரியாக ரவி பிஸ்னாய் உடனே நடுவரிடம் சொல்ல, நடுவர் உடனே அவரிடம் ஸாரி கேட்டுவிட்டு தன்னுடைய முடிவை மாற்றி பந்தை சரி என அறிவித்தார். வீரர் சுட்டிக்காட்ட நடுவர் களத்தில் உடனடியாக முடிவை மாற்றிக் கொண்ட சம்பவம் பார்ப்பதற்கு அருமையான ஒன்றாக இருந்தது. தற்பொழுது இது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.






