15 பந்து எதுவுமே பண்ண முடியல.. நானும் அபிஷேக் ஷர்மாவும் இதைத்தான் பிளான் பண்ணினோம் – ருதுராஜ் பேட்டி

0
448
Ruturaj

இந்திய அணி இன்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அபார சதம் அடிக்க அவருடன் இணைந்து ருதுராஜ் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார். முதல் பகுதி ஆட்டத்திற்கு பிறகு தங்களுடைய பேட்டிங் திட்டம் எப்படி இருந்தது? என்பது குறித்து ருதுராஜ் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி சுதாரித்து பேட்டிங் செய்வது என அறிவித்தது. கேப்டன் கில் நான்கு பந்தில் ஆறு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் சூழ்நிலை உணர்ந்து பொறுமையாக விளையாட பவர் பிளேவில் 36 ரன்கள் மட்டுமே வந்தது.

- Advertisement -

இன்னொரு முனையில் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தில் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை மைதானம் எங்கும் பறக்க விட்டார். 33 பந்துகளில் அரை சதம் அடித்தவர் அடுத்த 13 பந்துகள் மட்டுமே சந்தித்து 46 பந்துகளில் அதிரடி சதம் அடித்து ஆட்டம் இழந்தார்.

இந்த போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் சேர்ந்து 76 பந்துகளில் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நிலைத்து நின்று விளையாடிய ருத்ராஜ் 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். பினிஷர் ரிங்கு சிங் ஆட்டம் இழக்காமல் 22 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இருவரும் சேர்ந்து பேட்டிங்கில் என்ன மாதிரியான திட்டத்தை செயல்படுத்தினார்கள் என்று முதல் பகுதி ஆட்டத்திற்கு பிறகு பேசிய ருதுராஜ் கூறும் பொழுது “இது ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. நான் விளையாடிய முதல் 15 பந்துகளில் ஒரு பந்தை கூட மிடில் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நானும் அபிஷேக் ஷர்மாவும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். மேலும் நாங்கள் எங்களுடைய ஷேப்பை இழக்காமல் இருப்பது குறித்தும் பேசினோம்.

இதையும் படிங்க : 6,6,6.. அதிரடி சதம் அடித்த அபிஷேக் சர்மா.. எந்த இந்திய வீரரும் செய்யாத 2 சாதனைகள்.. தெறி பேட்டிங்

இது எங்களுக்கு நன்றாக வேலை செய்தது. அபிஷேக் ஷர்மா சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடினார். ஆடுகளத்தில் இரண்டு விதமான வேகங்கள் இருந்தது. பந்து சில நேரம் நன்றாகவும் சில நேரம் நின்றும் வந்தது.இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசுவது போல ஹார்ட் லென்த்தில் பந்து வீச வேண்டும். நாங்கள் அதைத்தான் செய்யப் போகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -