76 பந்தில் அரைசதம்.. பயிற்சி ஆட்டத்தில் ஜெய்ஷ்வால் அபாரம்.. விராட் கோலி சொதப்பல்

0
13037

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்காக பயிற்சி செய்யும் விதமாக இந்திய அணி 10 நாட்கள் முன்பு வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

இந்த தொடரில் அனுபவ வீரர் புஜாரா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் ருதுராஜ், நவதிப் ஷைனி, ஜெய்தேவ் உனாட்கட்  உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்ற இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் உள்ளூர் வீரர்களுடன் சேர்ந்து இந்திய அணி வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். இதில் முதலில் பேட்டிங் செய்த ரோகித் சர்மா அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.

இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 76 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தாம் தயாராகிவிட்டதை ஜெய்ஷ்வால் உணர்த்திவிட்டார். எனினும் இந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி மீண்டும் சொதப்பினார்.

அதுவும் அவர் ஆட்டம் இழந்த முறை அவர் இன்னும் பார்ம்க்கு வரவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. இதில் உனாட்கட் வீசிய பந்து ஆப்சைடில் சென்றது. இதனை அடிக்காமல் விராட் கோலி விட்டு இருக்க வேண்டும். எனினும் அதனை அவர் தொட விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இந்த ஷாட்டை ஆடும்போது அவருடைய ஃபுட் வொர்க் மோசமாக இருந்தது. இதன் மூலம் விராட் கோலி ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி சென்றார்.

- Advertisement -

ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், தற்போது சீனியர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. ஏற்கனவே புஜாரா ஆணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது விராட் கோலியும் ரஹானேவுக்கும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் அவர்கள் சதம் அடிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

எனினும் இது பயிற்சி ஆட்டம் என்பதால் கோலி கவனம் இல்லாமல் விளையாடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் ஜெயிஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்கி அரைசதம் அடித்திருப்பதால், அவர் டெஸ்ட் தொடரிலும் ஓப்பனிங் இறங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப் போன்று புஜாரா இடத்தில் சுப்மன் கில் விளையாட கூடும் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ் ஜெய்தேவ் உனாட்கட் இடம்பெறவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.