15 நாட்களில் 3 முறை மோதும் இந்தியா, பாகிஸ்தான்.. ஆசிய கோப்பை அட்டவணையில் டிவிஸ்ட்..விவரம் இதோ

0
186

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி,இலங்கை,  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், நேபாள், வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் மோதுகின்றன.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானும் நேபாளும் முல்தான் நகரில் மோதுகின்றன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி இலங்கை அணியும் வங்கதேசம் அணியும் பல பரிட்சை நடத்துகின்றன.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டம் செப்டம்பர் இரண்டாம் தேதி சனிக்கிழமை இலங்கையின் கெண்டி நகரில் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மூன்றாம் தேதி வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும், செப்டம்பர் நான்காம் தேதி இந்தியாவும் நேப்பாளும் பலப் பரிட்சை நடத்துகின்றன.

செப்டம்பர் 5ஆம் தேதி இலங்கையும், ஆப்கானிஸ்தானும் விளையாடும் இந்த சுற்றில் முடிவில் யார் எந்த புள்ளிகள் பெற்றாலும் பாகிஸ்தானுக்கு ஏ ஒன் என்றும் இந்தியாவுக்கு ஏ 2 என்றும் இடம் வழங்கப்படும். அந்த வகையில் சூப்பர் 4  சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதுகின்றன.

- Advertisement -

இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் இரண்டு இடங்களை படித்தால் மீண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி இறுதிப்போட்டியில் மூன்றாவது முறையாக மோத வாய்ப்பு ஏற்படும்.

இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருக்கிறது.இந்தியா தவிர மற்ற அணிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.