இங்கிலாந்து தொடர்.. இந்திய ஏ அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு.. அட்டவணை வெளியீடு

0
4403

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி இரண்டாம் தேதி விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது டெஸ்ட் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நான்காவது டெஸ்ட் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சி நகரிலும் ஐந்தாவது டெஸ்ட் மார்ச் 4ஆம் தேதி தர்மசாலாவிலும் நடைபெறுகிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அடுத்த வாரம் இந்தியா வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஜனவரி 12ஆம் தேதி இரண்டு நாள் கொண்ட முதல் பயிற்சி ஆட்டமும், ஜனவரி 17ஆம் தேதி நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டமும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இந்த இங்கிலாந்து அணியுடன் விளையாடுவதற்காக இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த தொடரின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் பங்கேற்கிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய சர்பிராஸ் கானுக்கு இந்திய ஏ அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர் தென்னாப்பிரிக்கா தொடரில் பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அணிக்காக தற்போது விளையாடி வரும் பிரதோஷ் ரஞ்சன் பால்,ஆர் சி பி வீரர் ராஜட் பட்டிதார் போன்றோரும் இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

விக்கெட் கீப்பர்களாக கே எஸ் பரத் மற்றும் ஐபிஎல் வீரர் துருவ் ஜூரல் ஆகியோரும் இந்திய ஏன் அணியில் விளையாடுகிறார்கள். வேகப்பந்துவீச்சாளராக துஷார் தேஷ் பாண்டே, நவதிப் ஷைனி, காவேரியப்பா, ஆகாஷ் தீப் போன்ற வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மனவ் சுதார் மற்றும் புல்கித் நாராங் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் இந்திய அணியில் விளையாடுகிறார்கள். இந்தத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெறுகிறது.