பேச்சா பேசுனீங்க..! அஸ்வினை வைத்து பதிலடி தந்த ரோகித்

0
927

ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆடுகளத்தை இந்திய வீரர்களின் அறிவுறுத்தலின்படி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகவும், சில பகுதிகளில் மட்டும் பந்து நன்றாக திரும்பும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்திரேலியா ஊடகங்கள் குற்றம் சாட்டினர்.

- Advertisement -

ஆனால் இதற்கு நேர் மாறாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், உஸ்மான் கவஜா ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்மித் லாபஸ்சேன் ஆகியோர் பொறுப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் ஜடேஜாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.

இதனால் ஆஸ்திரேலியா 177 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் ஆடுகளம் நன்றாக தான் இருக்கிறது என்றும் ஆஸ்திரேலியா தான் பேட்டிங் சரியாக செய்யவில்லை என்றும் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் நேற்று ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது போல் அவருடைய ஆட்டம் இருந்தது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் நைட் வாட்ச்மேன் ஆக அஸ்வினை ரோகித் சர்மா களம் இறக்கினார். தற்போது அஸ்வினும் பேட்டிங்கில் நன்றாக விளையாடி வருகிறார். இதன் மூலம் அஸ்வின் கூட இந்த ஆடுகளத்தில் நன்றாக விளையாடுகிறார் என்பதை ஆஸ்திரேலியா வீரர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தான் ரோகித் சர்மா இப்படி ஒரு முடிவை எடுத்ததாக தெரிகிறது .

இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் தான் பேட்டிங் சரியாக செய்யவில்லை என்று தெள்ளத் தெளிவாகிறது. 34 ஓவர் நிலவரப்படி இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் அடித்துள்ளது களத்தில் ரோகித் சர்மாவும் அஸ்வினும் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -