உலக டெஸ்ட் பைனல் தோல்விக்கு அடுத்த நாளே இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு.. மொத்தம் 10 போட்டிகள்

0
1419

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் ரசிகர்கள் இந்திய அணி வீரர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இந்திய டெஸ்ட் அணியில் உள்ள நட்சத்திர வீரர்களை அதிரடியாக நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை.

- Advertisement -

அதற்குள் ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக பலம் குன்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்தியா விளையாடுவதற்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் நட்சத்திர வீரர்கள் இல்லாத வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து விட்டு இழந்த மானத்தை மீட்க பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறதா என ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கி விட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த தொடருக்கான அட்டவணையை தற்போது பார்க்கலாம். மொத்தம் 10 போட்டிகள் நடைபெற இருக்கிறது. வரும் 12ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் 5 t20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் வரும் ஜூலை 12ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் ஜூலை 20ஆம் தேதியும் நடைபெறுகிறது. இது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இதேபோன்று ஒரு நாள் போட்டிகளுக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் இந்திய அணி ஜூலை 27ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியிலும், ஜூலை 29ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது.

இந்தத் தொடர் இரவு ஏழு மணிக்கு தொடங்கி இருக்கிறது. இந்தத் தொடர் முடிந்தவுடன் ஐந்து t20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் உடன் மோத இருக்கிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் டி20 போட்டியும் ஆகஸ்ட் 6ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறுகிறது.

இதனை அடுத்து கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு செல்கிறது. அங்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி நான்காவது டி20 போட்டியிலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி ஐந்தாவது டி20 போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

டி20 தொடர் இரவு 8 மணிக்கு இந்திய நிரப்படி தொடங்கும் இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் ரிங்கு சிங் முகேஷ் குமார், ருதுராஜ்  போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.